பக்கம் எண் :

சம்புமாலி வதைப் படலம்571

 

மறுத்து எழுமறலிகள் இவர் என அதிர்ந்தார்,
ஒறுத்து,உருத்திரன் என, தனித் தனி உதைத்தான்.

     கறுத்து எழுமனத்தினர் - கோபித்து எழுகின்றமனத்தை
உடையவர்களும்; எயிற்றினர் - கோரப் பற்களை உடையவர்களும்; கயிற்றார்
-
பாசம் என்னும் ஆயுதத்தைக் கொண்டவர்களும்; செறுத்து எரி விழிப்பவர்
-
பகைத்து நெருப்புப் போல விழிப்பவர்களும்; சிகைக் கழு வலத்தார் -
கூரிய கழு என்னும் படை வலிமை உடையவர்களும்; இவர் மறுத்து எழு
மறலிகள் என அதிர்ந்தார் -
இவர்கள் பகைமை பாராட்டிக் கிளம்புகின்ற
யமன்களே என்னும்படி பெரு முழக்கம் செய்பவர்களுமான அரக்க வீரரை;
ஒறுத்து - கடிந்து; உருத்திரன் என - உருத்திர மூர்த்தியைப் போல; தனித்
தனி உதைத்தான் -
அனுமனும் ஒவ்வொருவராக உதைத்துக் கொன்றான்.

     மார்க்கண்டேயர்பொருட்டு, சிவபிரான் யமனைத் தன் திருவடியால்
உதைத்து  அழித்ததைக் குறிக்கொண்டு, அனுமன், உருத்திரன் எனப்பட்டான்.
கயிறு - பாசப் படை; சிகைக்கழு - நுனி கூரிய கழுப்படை.          (38)

5588.

சக்கரம்,தோமரம், உலக்கை, தண்டு, அயில், வாள்,
மிக்கன தேர்,பரி, குடை, கொடி, விரவி
உக்கன; குருதிஅம்பெருந் திரை உருட்டிப்
புக்கன கடலிடை,நெடுங் கரப் பூட்கை.

     உக்கன குருதி அம்பெரும் திரை உருட்டி - அரக்கர்கள் சிந்திய
இரத்த வெள்ளத்துப் பெரும் அலைகளால் உருட்டப்பட்டதால் (அவற்றின்
இடையே); சக்கரம், தோமரம் - சக்கரங்களும் பெரிய தண்டாயுதங்களும்;
உலக்கை, தண்டு, அயில்வாள் - உலக்கைகளும் கதைகளும் வேல்களும்
வாள்களும்; மிக்கன - மிகுந்தனவாகி; தேர், பரி, குடை, கொடி விரவி -
தேர்களும், குதிரைகளும், குடைகளும் கொடிகளும் ஒன்றாகக் கலந்து; நெடும்
கரப் பூட்கை -
நீண்ட துதிக்கைகளை உடைய யானைகள்; கடல் இடை
புக்கன -
கடலின் இடையே போய்ப் புகுந்தன.

      பூட்கை - பூண் + கை; யானை.                           (39)