பக்கம் எண் :

572சுந்தர காண்டம்

5589.

எட்டின விசும்பினை;-எழுப் பட எழுந்த-
முட்டின மலைகளை;முயங்கின திசையை;
ஒட்டின ஒன்றைஒன்று; ஊடு அடித்து உதைந்து
தட்டுமுட்டு ஆடின,தலையொடு-தலைகள்.

எழுபட எழுந்ததலைகள் - (அனுமன் வீசிய) எழுஎன்னும் ஆயுதம்
பட்டதனால் (உடலை விட்டு வேறாகி) எழுந்தனவான அரக்கர்களின் தலைகள்;
விசும்பினை எட்டின - ஆகாயத்தை அளாவினவும்; மலைகளை முட்டின -
மலைகளின் மீது மோதியனவும்; திசையை முயங்கின - திக்குகளைத்
தழுவியனவும்; ஒன்றை ஒன்று ஒட்டின - ஒன்றோடு ஒன்று சேர்ந்தனவுமாகி;
ஊடு அடித்து உதைந்து - போர்க்களத்தில் அடிபட்டுத் தள்ளப்பட்டு;
தலையொடு தட்டு முட்டு ஆடின - (முன்னமே போர்க்களத்தில்) விழுந்து
கிடந்த) தலைகளோடு தட்டு முட்டுப் பொருள் போல அங்கும் இங்கும் சிதறிக்
கிடந்தன. (40)

சம்புமாலிசினத்தோடு போருக்கு விரைதல்

                               அறுசீர்ஆசிரிய விருத்தம்

5590.

கானே காவல் வேழக் கணங்கள் கத வாள் அரி
                                    கொன்ற
வானே எய்த,தனியே நின்ற மத மால் வரை
                                    ஒப்பான்,
தேனே புரை கண்கனலே சொரிய, சீற்றம்
                                    செருக்கினான்,
தானேஆனான்-சம்புமாலி, காலன் தன்மையான்.

காலன்தன்மையான் சம்பு மாலி - யமன் போன்ற கொடிய
தன்மையனாகிய சம்புமாலி; கத(ம்)வாள் அரி கொன்ற - கோபம் உள்ள ஒளி
தங்கிய சிங்கத்தினால் கொல்லப்பட்டனவாய்; கானே காவல் வேழம்
கணங்கள் வானே எய்த -
காட்டையே தங்கட்கு உரிய வாழிடமாகக்
கொண்ட யானைக் கூட்டங்கள் விண்ணுலகம் சேர (இறக்க); தனியே நின்ற
மதமால் -
தனிப்பட்டு நின்ற; வரை ஒப்பான் - மத மயக்கம் கொண்ட
யானையை ஒத்து; தானே ஆனான் - (தன்னோடு வந்தவரெல்லாம் இறக்க)
தான் ஒருவனே எஞ்சி நின்றவனாய்; தேனே புரை கண் கனலே சொரிய