பக்கம் எண் :

சம்புமாலி வதைப் படலம்575

என்று சொல்லி;நெருப்பு நக நக்கான் - நெருப்புப் பெருகி வரச் சிரித்து;
எனைப் பொன்று வாரின் ஒருவன் என்றாய் போலும் என்னா -
என்
னைப்போரில் இறப்பவருள் ஒருவன் என்று எளிதாக நினைத்தாய்
போலும் என்றுகூறி; வன் திண் சிலையின் வயிரக் காலால் - மிக வலிய
தன் வில்லின்வயிரம் போன்று உறுதியான தண்டினால்; வடிதிண் சுடர்
வாளி -
கூர்மைவாய்ந்த  வலிய ஒளி வீசும் அம்புகளை; ஒன்று பத்து, நூறு
நூறாயிரமும் -
ஒன்றும், பத்தும், நூறும் நூறாயிரமும் என்ற கணக்குப் படி;
உதைப்பித்தான் -(அனுமன் மீது) செலுத்தினான்.

     நன்று நன்று;அடுக்கு இகழ்ச்சிப் பொருளது. நகுதல் - பெருகுதல்
என்னும் கருத்தில் வந்தது. வன் திண்: ஒரு பொருட் பன்மொழி உதைத்தல் -
வலிந்து செலுத்துதல்.                                       (44)

5594.

‘செய்தி,செய்தி, சிலை கைக் கொண்டால், வெறுங்,
                             கை திரிவோரை,
நொய்தின்வெல்வது அரிதோ ?’ என்னா, முறுவல்
                             உக நக்கான்;
ஐயன், அங்கும்இங்கும் காலால் அழியும் மழை
                             என்ன,
எய்த எய்த பகழிஎல்லாம், எழுவால் அகல்வித்தான்.

     ஐயன் - சிறந்தோனானஅனுமன்; சிலை கைக் கொண்டால் - நீ
வில்லைக் கையில் கொண்டால்; வெறும் கை திரி வோரை - ஆயுதம் இன்றி
வெறும் கைகளோடு திரிகின்றவர்களை; நொய்தின் வெல்வது அரிதோ
என்னா -
எளிதில் வெல்வது அரிய செயலாகுமா ? என்று சொல்லி; முறுவல்
உக நக்கான் -
பற்கள் வெளியில் தோன்றுமாறு சிரித்து; எய்த எய்த பகழி
எல்லாம் -
சம்பு மாலி மேன் மேலும் தூண்டிய அம்புகள் அனைத்தையும்;
காலால் அழியும் மழை என்ன -
காற்றினால் சிதறி அழியும்
மழைத்தாரைகள் போல; எழுவால் - தன் கையில் கொண்ட எழு என்னும்
ஆயுதத்தால்; அங்கும் இங்கும் - எல்லாப் புறங்களிலும்; அகல் வித்தான் -
நழுவிச் சிதறிப் போகுமாறு நீக்குவித்தான்.

     செய்தி செய்தி;அடுக்கு இகழ்ச்சிப் பொருளது. எய்த. எய்த; அடுக்கு
விரைவுப் பொருளது.                                         (45)