பக்கம் எண் :

588சுந்தர காண்டம்

தோள்களையும், சிறந்தஆயுதங்களையும் உடைய காலாட்படைப் பிரிவுகளின்
கணக்கு; அவற்றினுக்கு இரட்டி - அந்தக் குதிரைப் படைகளுக்கு இரு
மடங்காகும் (இரண்டு லட்சம்)

    பஞ்சசேனாபதியர் கொணர்ந்த நால்வகைப் படையின் எண்ணிக்கை
கூறியது. சூழி - யானைகளின் முகத்தில் அணியும் முகபடாம். பூட்கை -
யானை. பாழிதோள் - பெரியதோள்.                              (11)

5612.

கூய்த்தரும்தொறும், தரும்தொறும், தானை வெங்
                          குழுவின்
நீத்தம், வந்துவந்து, இயங்கிடும் இடன் இன்றி
                          நெருங்க,
காய்த்து அமைந்தவெங் கதிர்ப் படை, ஒன்று ஒன்று
                          கதுவி,
தேய்த்துஎழுந்தன, பொறிக் குலம், மழைக் குலம்
                          தீய.

     கூய்த்தரும்தொறும் தரும்தொறும் - படைத்தலைவர்கள் கூவி
அழைக்கும் போதெல்லாம்; வெம் தானைக் குழுவின் நீத்தம் - கொடிய
அச்சேனைக் கூட்டத்தின் பெருக்கம்; வந்து வந்து - மேன்மேலும் வந்து;
இயங்கிடும் இடன் இன்றி நெருங்க - அவை சஞ்சரிப்பதற்குப் போதிய
இடம் இல்லாமல் நெருங்கி நிற்க; காய்த்து அமைந்த வெம் கதிர்ப்படை -
உலைக் களத்தில் காய்ச்சிக் கூராக வடித்த கொடிய ஒளியுள்ள ஆயுதங்கள்;
ஒன்று ஒன்று கதுவி தேய்த்து - ஒன்றோடொன்று பற்றி உராய்ந்து,
தேய்த்தலினால்; (அவற்றில் உண்டான); பொறிக் குலம் மழைக்குலம் தீய
எழுந்தன -
நெருப்புப் பொறிகளின் கூட்டம், மேகக்கூட்டங்களைச்
சுட்டெரிக்க மேற்கிளம்பிச் சென்றன.

     இது சேனாவீரர்களின் பெருக்கத்தையும், வீரர்கள் ஏந்திச் சென்ற
போர்ப்படைக் கருவிகளின் மிகுதியையும் குறிப்பிடுகின்றது.           (12)

5613.

பண் மணிக்குல யானையின் புடைதொறும் பரந்த
ஒண் மணிக் குலம்மழையிடை உரும் என ஒலிப்ப,
கண் மணிக் குலம்கனல் எனக் காந்துவ; கதுப்பின்
தண் மணிக் குலம்மழை எழும் கதிர் எனத்
                                தழைப்ப.*