பக்கம் எண் :

592சுந்தர காண்டம்

எழுவும் - குற்றமற்ற தெற்குத்திக்குக்குரிய எமனது நெருப்பை முனையில்
கொண்ட தண்டாயுதமும்; ஈசன் வன் தனிச் சூலமும் - சிவபெருமானது
வலிய ஒப்பற்ற சூலாயுதமும்; என்று இவை ஒன்றும் - என்று பெருமையாய்ச்
சொல்லக் கூடிய இவை ஒன்றும்; ஊசி போழ்வது ஓர் வடுச் செயா - ஊசி
ஊடுருவிச் செல்லக் கூடிய (மிகச் சிறிய) ஒரு வடுவையேனும் செய்ய மாட்டாத;
நெடும் புயம் உடையார் -
பெரிய தோள்களை உடையவர் (படைத் தலைவர்)                                              (17)

5618.

சூர்தடிந்தவன் மயிலிடைப் பறித்த வன் தோகை,
பார் பயந்தவன்அன்னத்தின் இறகிடைப் பறித்த
மூரி வெஞ் சிறகு,இடை இட்டுத் தொடுத்தன
                                  முறுக்கி,
வீர சூடிகைநெற்றியின் அயல் இட்டு விசித்தார்.

     சூர் தடிந்தவன் - சூரபதுமனைக் கொன்ற முருகக் கடவுளின்; மயில்
இடைப் பறித்த வன் தோகை -
வாகனமாகிய மயிலின் வாலினிடத்திருந்து
பிய்த்த வலிய இறகுகளையும்; பார்பயந்தவன் அன்னத்தின் இறகிடைப்
பறித்த -
பூமியைப் படைத்த நான்முகனின் வாகனமான அன்னப்
பறவையினது இறகிலிருந்து எடுத்த; மூரி  வெம் சிறகு - வலிய அழகிய
சிறகுகளையும்; இடை இட்டு முறுக்கி தொடுத்தன - நடு நடுவே வைத்து
முறுக்கித் தொடுத்தனவான; வீர சூடிகை - வீரத்துக்கு அறிகுறியான சுட்டியை;
நெற்றியின் அயல் இட்டு விசித்தார் - நெற்றியினிடத்திலே வைத்துக் கட்டிக்கொண்டிருப்பவர்கள்.                               

     வீர சூடிகை - வீரர்கள்அணியும் நெற்றிச் சுட்டி.            (18)

5619.

பொன் திணிந்த தோள் இராவணன் மார்பொடும்
                                   பொருத
அன்று இழந்தகோடு அரிந்து இடும் அழகு உறு
                                   குழையர்;
நின்ற வன் திசைநெடுங் களி யானையின் நெற்றி
மின் திணிந்தஅன ஓடையின் வீர பட்டத்தர்.

     பொன் திணிந்ததோள் இராவணன் - பொன்னாபரணங்கள்நிறைந்த
தோள்களை உடைய இராவணனது; மார் பொடும்