பெருங்கடல்கள் ஒன்றுசேர்ந்து பொங்கி எழுந்தாலும்; சரிக்கும் வன்மை யார் - (அவற்றை யெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல்) இயங்குகின்ற ஆற்றல் உடையவர்கள். (இவர்கள்). ‘தோல் - யானை, சரித்தல் - இயங்குதல். (24) அரக்கர் படையைஅனுமன் காணுதல் | 5625. | இவ் வகைஅனைவரும் எழுந்த தானையர், மொய் கிளர்தோரணம் அதனை முற்றினார்; கையொடு கை உறஅணியும் கட்டினார்; ஐயனும்,அவர்நிலை, அமைய நோக்கினான். |
இவ்வகை அனைவரும்- இவ்வாறாக அந்தப் படைத் தலைவர் ஐவரும்; எழுந்த தானையர் - மேல் நோக்கி எழுந்த சேனையை உடையவராய்; மொய்கிளர் தோரணம் அதனை முற்றினார் - வலிமையால் விளங்கும் தோரண வாயிலைச் சூழ்ந்து கொண்டு; கையொடு கை உற - ஒரு பக்கத்தோடு மற்றொரு பக்கமும் பொருந்த; அணியும் கட்டினார் - சேனைகளை அணிவகுத்து அமைத்தனர்; ஐயனும் அவர் நிலை அமைய நோக்கினான் - அனுமனும் அவர்களது போர் நிலையை நன்றாகப் பார்த்தான். (25) | 5626. | அரக்கரதுஆற்றலும், அளவு இல் சேனையின் தருக்கும், அம்மாருதி தனிமைத் தன்மையும், பொருக்கெனநோக்கிய புரந்தராதியர், இரக்கமும்,அவலமும், துளக்கும், எய்தினார். |
அரக்கரதுஆற்றலும் - (அனுமனைச் சூழ்ந்துகொண்ட) பஞ்ச சேனாபதிகளின் வலிமையையும்; அளவு இல் சேனையின் தருக்கும் - அளவற்ற அந்தச் சேனையின் பெருமிதத்தையும்; அம்மாருதி தனிமைத் தன்மையும் - அந்த அனுமன் தனியாய் நிற்கும் நிலைமையையும்; பொருக்கென நோக்கிய புரந்தராதியர் - திடீரென்று பார்த்த இந்திரன் முதலிய தேவர்கள்; இரக்கமும், அவலமும் துளக்கும் எய்தினார் - (அனுமனிடத்துக்) கருணையும், துன்பமும் நடுக்கமும் (ஒருங்கே) அடைந்தனர். |