பக்கம் எண் :

பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்597

     இந்திரன் முதலியதேவர்கள், பஞ்ச சேனாபதிகளின் ஆற்றலை நன்கு
அறிந்தவர்கள்.  அதனால்,  சேனைகளின் நடுவில் தனித்து நிற்கும் அனுமனது
நிலைக்கு, இரக்கமும் அவலமும் அடைந்தனர்.                     (26)

5627.

 ‘இற்றனர்அரக்கர் இப் பகலுளே’ எனா,
கற்று உணர்மாருதி களிக்கும் சிந்தையான்,
முற்றுறச் சுலாவியமுடிவு இல் தானையைச்
சுற்றுற நோக்கி,தன் தோளை நோக்கினான்.

     கற்று உணர்மாருதி - (பல நூல்களையும்) கற்றுத் தேர்ந்த அனுமான்;
அரக்கர் இப் பகலுனே இற்றனர் எனா, களிக்கும் சிந்தையான் -
இந்த
அரக்கர்கள், இன்று ஒரு பகல் பொழுதுக்குள்ளே அழிவது உறுதி என்று
எண்ணி மகிழ்கின்ற மனத்தினனாய்; முற்று உறச் சுலாவிய முடிவு இல்
தானையை -
(தன்னை) முழுவதும் சூழ்ந்து கொண்ட எல்லையற்ற
அரக்கர்படைகளை; சுற்று உற நோக்கி - நான்கு பக்கத்திலும் நன்றாகப்
பார்த்து; தன் தோளை நோக்கினான் - தனது தோள்களையும் பார்த்தான்.
                                                          (27)

அனுமனைக் கண்டஅரக்க வீரரின் ஐயப்பாடு 

5628.

‘புன் தலைக் குரங்கு இது போலுமால் அமர்
வென்றது !விண்ணவர் புகழை வேரொடும்
தின்ற வல்அரக்கரைத் திருகித் தின்றதால் !’
என்றனர்,அயிர்த்தனர், நிருதர் எண்ணிலார்.

     எண் இலார்நிருதர் - (அங்கிருந்த)கணக்கில்லாத அரக்கர்கள்; புன்
தலைக் குரங்கு இது போலும் -
இழிவான தலையை உடைய குரங்கு இது
தானோ; அமர் வென்றது - பெரிய போரில் வெற்றி கொண்டது; விண்ணவர்
புகழை வேரொடும் தின்ற வல் அரக்கரை -
தேவர் புகழை அடியோடு
ஒழித்த வலிய அரக்கர்களை; திருகித் தின்றது - முறுக்கித் தின்றது ?;
என்றனர் அயிர்த்தனர் - என்று ஐயம் கொண்டனர்.

     போலும் என்றஒப்பில் போலியும் ஆல் என்ற அசையும் சேர்ந்து
நின்று, நம்ப முடியாமையை உணர்த்தின.                         (28)

அனுமன் பெரியவடிவம் கொள்ளலும், அரக்கர் சினந்து படை வழங்கலும்