பக்கம் எண் :

பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்601

     இரண்டு தேர்இரண்டு கைத் தலத்தும் ஏந்தி - இரண்டு தேர்களைத்
தன்னிரு கைகளில் எடுத்து; வேறு இரண்டு மால் யானைபட்டு
உருளஎற்றும் -
(எதிர்வந்தது) வேறே இரண்டு பெரிய யானைகள் அழிந்து
உருளுமாறு தாக்கினான்; கை இரண்டின் இரண்டு மால் யானை ஏந்தி -
தன் இரு கைகளிலும் வேறு இரண்டு பெரியயானைகளை எடுத்து; இரண்டு
பாலினும் வேறு வரும் பரியை எற்றும் -
இரு பக்கங்களிலும் வேறு வந்த
குதிரைகளை மோதி அடித்தான்.

     தன்னை எதிர்க்கவந்த தேர்கள் முதலியவற்றைக் கொண்டே,
பகைவரின் யானைகள் முதலியவற்றை அழித்து ஒழித்தான் அனுமன்
என்பதாம்.                                             (35)

5636.

மா இரு நெடுவரை வாங்கி, மண்ணில் இட்டு,
ஆயிரம் தேர் படிஅரைக்குமால்; அழித்து,
ஆயிரம் களிற்றைஓர் மரத்தினால் அடித்து,
‘ஏ’ எனும்மாத்திரத்து எற்றி முற்றுமால்.

     மா இரு நெடுவரைவாங்கி - (மேலும் அனுமன்)பக்கத்தே உள்ள
மிகப் பெரிய மலையை எடுத்து; (அதனைக் கொண்டு) ஆயிரம் தேர் பட
மண்ணில் இட்டு அழித்து அரைக்கும் -
ஆயிரந் தேர்கள் அழியும்படி,
அவைகளைத் தரையில் வைத்து அரைப்பான்; ஏ எனும் மாத்திரத்து -
இரண்டு மாத்திரைப் பொழுதிற்குள்; ஓர் மரத்தினால் - ஒரு மரத்தைக்
கொண்டு; ஆயிரம் களிற்றை அடித்து எற்றி முற்றும் - ஆயிர
யானைகளைஅடித்து (அவற்றை) மாயச் செய்வான்.

     ‘ஏ’ யெனும் அளவுஇரண்டு, மாத்திரை நேரம்; கண் இமைக்கும் நேரம்
ஒரு மாத்திரை. ‘ஏ’ நெடிலெழுத்து; ஆகையால் இரண்டு மாத்திரை   (36)

5637.

உதைக்கும்வெங் கரிகளை; உழக்கும் தேர்களை;
மிதிக்கும் வன்புரவியை; தேய்க்கும் வீரரை;
மதிக்கும் வல்எழுவினால்; அரைக்கும் மண்ணிடை;
குதிக்கும் வன்தலையிடை; கடிக்கும்; குத்துமால்.

     உதைக்கும் வெம்கரிகளை - (பகைவர் தன் மீது)செலுத்துகின்ற
கொடிய யானைகளைக் காலில் உதைப்பான்; தேர்களை உழக்கும் -
தேர்களைக் கலக்குவான்; வன் புரவியை