பக்கம் எண் :

602சுந்தர காண்டம்

மிதிக்கும் - வலிய குதிரைகளைக்காலால் மிதிப்பான்; வீரரைத் தேய்க்கும் -
வீரர்களைத் தரையோடு சேர்த்துத் தேய்த்து விடுவான்; வல் எழுவினால்
மண்ணிடை மதிக்கும் -
(தான் கையில் கொண்ட) வலிய எழுவால்
தரையிட்டுக் குழம்பாக்குவான்; வன் தலை இடைக் குதிக்கும் - (மேலும்)
அவ்வரக்கரின் தலையிடத்தே குதிப்பான்; கடிக்கும், குத்தும் - அவர்களைக்
கடிப்பான் குத்துவான்.

     எழு - ஒருவகைப்போர்க் கருவி. மதிற்கதவில் குறுக்கே இடப்படும்
கணையமரம் எனவும் கூறுவர். மதித்தல் - கடைவது போலக் குழப்புதல். (37)

5638.

விசையின்மான் தேர்களும், களிறும் விட்டு, அகல்
திசையும்ஆகாயமும் செறிய, சிந்துமால்;
குசை கொள் பாய் பரியொடும், கொற்ற வேலொடும்,
பிசையுமால்அரக்கரை, பெருங் கரங்களால்.

     விசையின் -(மேலும்அவ்வனுமன்) வேகமாக; மான் தேர்களும்
களிறும் விட்டு -
குதிரைகள் பூட்டப்பட்ட தேர்களையும் யானைகளையும்
விட்டெறிந்து; அகல் திசையும் ஆகாயமும் செறியச் சிந்தும் - அகன்ற
திக்குகளும் ஆகாசமும் போய் நிறையும் படி சிதறிவிழச் செய்வான்; குசை
கொள் பாய் பரியொடும் -
கடிவாளத்தைக் கொண்ட பாய்ந்து செல்லும்
தன்மையுள்ள குதிரைகளுடனும்; கொற்ற வேயொடும் - (கையிற் பிடித்த)
வெற்றி பொருந்திய வேலாயுதத்துடனும்; அரக்கரை - அந்த அரக்க
வீரர்களை; பெரும் கரங்களால் - (தனது) பெரிய கைகளினால்; பிசையும் -
பிசைந்து கொல்வான்.

     மான் - குதிரை.குசை - கடிவாளம்.                       (38)

5639.

தீ உறுபொறியுடைச் செங் கண் வெங் கைமா,
மீ உற, தடக்கையால் வீரன் வீசுதோறு,
ஆய் பெருங்கொடியன, கடலின் ஆழ்வன,
பாயுடை நெடுங்கலம் படுவ போன்றவே.

     உறு தீப் பொறிஉடை - மிக்க நெருப்புப் பொறிகளை உடைய;
செங்கண் வெங்கை மா -
சிவந்த கண்களைக் கொண்ட கொடிய
யானைகளை; வீரன் தடக் கையால் மீ உற வீசு தோறு - அனுமன் தனது
பெரிய கைகளைக் கொண்டு ஆகாயத்தின் மீது