வீசி எறியுந் தோறும்;ஆய் பெருங் கொடியன - சிறந்த பெரிய கொடிகளை உடையவாகி; கடலின் ஆழ்வன - கடலில் வீழ்பவை; பாய் உடை நெடும் கலம் படுவ போன்ற - பாய் மரங்களை உடைய நெடிய மரக்கலங்கள் (கடலில்) மூழ்குவனவற்றை ஒத்திருந்தன. கொடியோடு யானை கடலில் ஆழ்வது, பாய் மரத்தோடு மரக்கலம் கடலில் மூழ்குவதை ஒத்திருந்தது. ‘பண்ணார் களிறே போல் பாயோங்குயர் நாவாய்’ (சீவக சிந்தாமணி 2793) எனப் பாய்மரக் கப்பல்கள் கொடி தாங்கிய களிறுபோல் தோற்றம் அளிப்பதாகத் திருத்தக்க தேவரும் பாடினார். (39) | 5640. | தாரொடும்,உருளொடும், தடக் கையால் தனி வீரன் விட்டுஎறிந்தன, கடலின் வீழ்வன, வாரியின் எழும்சுடர்க் கடவுள் வானவன் தேரினைநிகர்த்தன, புரவித் தேர்களே. |
தனி வீரன் -ஒப்பற்றவீரனான அனுமன்; தடக்கையால் விட்டு எறிந்தன - வலிய தன்கைகளால் வீசி எறியப்பட்டவனவாகி; கடலின் வீ்ழ்வன - கடலில் சென்று வீழ்வனவாகிய; தாரொடும் உருளொடும் - கிண்கிணியோடும் சக்கரத்தோடும் கூடியனவாய்க்; புரவித் தேர்கள் - குதிரைகள் பூட்டப்பட்ட தேர்கள்; வாரியின் எழும் - கடலில் தோன்றுகின்ற; சுடர்க்கடவுள் வானவன் தேரினை நிகர்த்தன - ஆயிரம் கதிர்களோடு கூடிய கடவுளாகிய சூரியனுடைய தேர்போல் காணப்பட்டன. கடலில் விழுந்ததேர்கள், கடலினின்று தோன்றும் சூரியனது தேரை ஒத்தன. (40) | 5641. | மீ உறவிண்ணிடை முட்டி வீழ்வன, ஆய் பெருந்திரைக் கடல் அழுவத்து ஆழ்வன, ஓய்வில புரவி,வாய் உதிரம் கால்வன, வாயிடை எரியுடைவடவை போன்றவே. |
மீ விண் இடை உற- மேலேயேஉள்ள வானிடத்துப் பொருந்த, ‘(அனுமன் வீசி எறிந்ததனால்); முட்டி வீழ்வனவாய் - சென்று முட்டுண்டு கீழே விழுகின்றனவாய்; பெருந்திரைக் கடல் அழுவத்து ஆழ்வன - பெரிய அலைகளை உடைய கடற் பரப்பில் அமிழ்வனவும்; ஓய்வில புரவி - எண்ணிறந்த குதிரைகள்; வாய் உதிரம் கால்வன - வாய்களினின்றும் இரத்த நீரைச் |