சொரிகின்றவை;வாயிடை எரி உடை - வாயிடத்து நெருப்பை உடைய; வடவை போன்ற - வடவாமுகாக்கினி போன்று விளங்கின. வடவை என்பதுகடலில் உள்ள நீர் கொந்தளித்து எழாதபடி அந் நீரைச்சுவறச் செய்யும் தீயைத் தன்முகத்தில் கொண்டுள்ளதாய்க் கடவுளால் அமைக்கப்பெற்ற ஒரு பெண் குதிரை என்று நூல்கள் கூறும். இங்குக் குதிரைகள், வடவைக் குதிரைக்கும், அவற்றின் வாயிலிருந்து வெளிப்படும் இரத்தம் அவ் வடவைக்குதிரை வாயிலிருந்து தோன்றும் நெருப்புக்கும் உவமை ஆயின. (41) | 5642. | வரிந்து உறவல்லிதின் சுற்றி, வாலினால் விரிந்து உறவீசலின், கடலின் வீழ்குநர் திரிந்தனர்-செறி கயிற்று அரவினால் திரி அருந் திறல்மந்தரம் அனையர் ஆயினார். |
வாலினால்வல்லிதின் உறச் சுற்ற வரிந்து - அனுமன் தனது வாலினால் அழுத்தமாகச் சுற்றிக்கட்டி; விரிந்து உற வீசலின் - வெகு தூரம் செல்லும்படி வீசியெறிதலினால்; கடலின் வீழ்குநர் திரிந்தனர் - கடலில் போய் விழுந்து சுழல்கின்ற அரக்கவீரர்கள்; செறி கயிற்று அரவினால் திரி - நெருங்கிய வாசுகி என்னும் (பாம்பு) கயிற்றினால் கடையப்பட்டுச் சுழன்ற; அருந் திறல் மந்தரம் அனையர் ஆயினார் - அரிய வலிமை பெற்ற மந் தரமலையை ஒத்தவராயினர். அரக்கர்களாகியகாலாட்படை அழிந்தமை கூறப்பட்டது. அரக்கர்கள் மந்தர மலைக்கும் அனுமன்வால் வாசுகி என்னும் பாம்புக்கும் உவமை. (42) | 5643. | வீரன் வன்தடக் கையால் எடுத்து வீசிய வார் மதக்கரியினின், தேரின், வாசியின், மூரி வெங் கடல்புகக் கடிதின் முந்தின, ஊரின் வெங்குருதி ஆறு ஈர்ப்ப ஓடின. |
ஊரின் வெம்குருதி ஆறு - விரைந்து செல்கின்றவெப்பமுள்ள இரத்தப் பெருக்குகள்; வீரன்வன் தடக்கையால் - அனுமன் தனது பெரிய கைகளால்; எடுத்து வீசிய - எடுத்து வீசி எறிந்த; வார் மத கரியி்னின் - ஒழுகுகின்ற மத நீரை உடைய யானைகளினும்; தேரின் - தேர்களினும்; வாசியின் - குதிரை |