அனுமன் கையால் இறந்துபடுவது அல்லாமல்; புறத்துப் போவரோ - வெளியே தப்பிப் போவார்களோ ? (மாட்டார் என்றபடி) அந்த அரக்கர்வீரர் இறந்தொழிவதற்கு வேண்டியன யாவும் நிரம்பியிருத்தலால் அவர்கள் யாவரும் இறந்தொழிவது அன்றி அவர்களுக்கு வேறு வழி இல்லை என்று கூறப்பட்டது. அன்றினர் - பகைவர் (45) படைகள் முழுமையாகஅழிதல் | 5646. | முழு முதல்,கண்ணுதல், முருகன் தாதை, கைம் மழு எனப்பொலிந்து ஒளிர் வயிர வான் தனி எழுவினின்,பொலங் கழல் அரக்கர் ஈண்டிய குழுவினை, களம்படக் கொன்று நீக்கினான். |
முழு முதல்கண்ணுதல் முருகன் தாதை - மும் மூர்த்திகளில் சேர்ந்தவனாகிய, கண்ணை நெற்றியிலே கொண்ட, முருகக் கடவுளின் தந்தையாகிய சிவபிரானது; கை மழு என - கையில் ஏந்திய மழுவாயுதம் போல; பொலிந்து ஒளிர் - மிக்கு விளங்குகின்ற; வயிர வான் தனி எழு வினின் - உறுதியான் சிறந்த ஒப்பற்ற இரும்புத் தூணினால்; பொலன் கழல் அரக்கர் ஈண்டிய குழு வினை - அழகிய வீரக்கழல் அணிந்த அரக்கருடைய நெருங்கிய கூட்டத்தை; களம் படக் கொன்று நீக்கினான் - போர்க் களத்தில் இறந்த விழுமாறு கொன்று தொலைத்தான். (46) தானை அழிந்தபின்சேனைத்தலைவர் ஐவரும் அனுமனுடன்பொருது வீழ்தல் | 5647. | உலந்ததுதானை; உவந்தனர் உம்பர்; அலந்தலை உற்றது,அவ் ஆழி இலங்கை; கலந்தது, அழும்குரலின் கடல் ஓதை; வலம் தருதோளவர் ஐவரும் வந்தார். |
தானை உலந்தது -சேனைமுழுவதும் அழிந்துவிட்டது; உம்பர் உவந்தனர் - (அதுகண்டு) தேவர்கள் மகிழ்வுற்றனர்; அவ் ஆழி இலங்கை அலம் தலை உற்றது - கடல் சூழ்ந்த அந்த இலங்கை நகரம் குழப்பம் அடைந்தது; அழும் குரலின் கடல் ஓதை கலந்தது - இலங்கையிலுள்ளாரது அழு குரலாகிய கடலோசை எங்கும் |