அலம்புதல் - கழுவுதல்.ஆழி வடிம்பு அலம்ப நின்றான் என்று நளவெண்பா பேசும். (78) | 4819. | பேழ்வாய்அகத்துஅலது பேர்உலகம் மூடும் நீள்வான்அகத்தினிடை ஏகும்நெறி நேரா ஆழ்வான்அணுக்கன் அவள்ஆழ்பில வயிற்றைப் போழ்வான் நினைத்தினைய வாய்மொழி புகன்றான்: |
பேர்உலகம் மூடும்நீள்வான் அகத்தின் இடை - பெரிய உலகை மூடுகின்ற நீண்ட ஆகாயத்தில்; பேழ்வாய் அகத்து அலது - (அரக்கியின்) பிளந்த வாயே அல்லாமல்; ஏகும் நெறி நேரா ஆழ்வான் - செல்லும் வழி கிடையாமல் துன்புற்ற ;அணுக்கன்- (இராமபிரானின்) அணுக்கத் தொண்டனாகிய அனுமன்; அவள் ஆழ்பில வயிற்றைப் - அவள் ஆழமானகுகைபோன்ற வயிற்றைப்; போழ்வான் - பிளப்பதற்கு; நினைத்து - எண்ணி;இனைய வாய்மொழி - இப்படிப்பட்ட வார்த்தையை; புகன்றான் - கூறினான். வானில் கடந்துசெல்வதற்கு அரக்கியின் வாயைத் தவிர வேறு இடம் இன்மையால் துன்புற்ற அனுமன் அரக்கியின் வாயைப் பிளக்க எண்ணி இந்த வார்த்தையைக் கூறினான். (79) | 4820. | ‘சாயா வரம்தழுவினாய் தழியபின்னும் ஓயாஉயர்ந்தவிசை கண்டுமுணர் கில்லாய் வாயால் அளந்துநெடு வான்வழி அடைத்தாய் நீயாரை? என்னைஇவண்நின்றநிலை’ என்றான். |
சாயாவரம்தழுவினாய் - நிழலைப் பிடித்துஇழுக்கும் வரத்தால் என்னை இழுத்தாய்; தழிய பின்னும் - இழுத்த பிறகும்; ஓயா உயர்ந்த விசை- தளர்ச்சி யடையாத வேகத்தை; கண்டும் - பார்த்தும்; உணர்கில்லாய் -(என் வலிமையை) அறியாமலுள்ளாய்; நெடுவான் வழி - பெரிய ஆகாயமார்க்கத்தை; வாயால் - வாயினால்; அளந்து அடைத்தாய்- அளாவித்தடுத்தாய்; நீ யாரை - நீ யார்?; இவண் நின்ற நிலைஎன்னை? - இவ்விடத்தேநிற்கின்ற நிலைமைக்குக்காரணம் யாது; என்றான் - என்று வினவினான். அரக்கியே !நிழலை இழுக்கும் வரத்தால் என்னை இழுத்தாய். யானே அதற்கு அடங்காமல் செல்கிறேன். என் ஆற்றலை உணராமல் உள்ளாய். நீ வான்வழி அடைத்து நிற்கும் காரணம் யாது என்று |