செய்தார் - அந்த கற்பாறையை,(தங்கள் ஆயுதங்களால்) பொடியாக உதிரச் செய்தார்கள். எறியப்பட்டமலையின் வேகத்தால் அதிலிருந்து நெருப்புப் பொறி உண்டாயிற்று. (53) | 5654. | தொடுத்த,தொடுத்த, சரங்கள் துரந்த; அடுத்து, அகன்மார்பின் அழுந்தி, அகன்ற; மிடல்தொழிலான், விடு தேரொடு நொய்தின் எடுத்து,ஒருவன்தனை, விண்ணில் எறிந்தான். |
தொடுத்ததொடுத்த - மேன் மேலும்அந்நால்வர் பூட்டி வி்ட்ட; சரங்கள் துரந்த - அம்புகள் அங்கு நின்றும் வெளிப்பட்டனவாய்; அகல் மார்பின் அடுத்து அழுத்தி அகன்ற - (அனுமனது) அகன்ற மார்பில் பொருந்தித் தைத்து அப்பாற் சென்றன; மிடல் தொழிலான் - (அப்போது) வலிய போர்த்தொழிலை உடைய அனுமன்; ஒருவன் தனை - (அந்நால்வருள்) ஒருவனை; விடு தேரொடு நொய்தின் எடுத்து - (அவன்) செலுத்திவந்த தேரோடு எளிதாகத் தூக்கி; விண்ணில் எறிந்தான் - ஆகாயத்தில் வீசினான். நால்வரின்ஒருவனைத் தேரோடு ஆகாயத்தில் அனுமன் வீசினன் என்பதாம். (54) | 5655. | ஏய்ந்து எழுதேர் இமிழ் விண்ணினை எல்லாம் நீந்தியது;ஓடி நிமிர்ந்தது; வேகம் ஓய்ந்தது;வீழ்வதன்முன், உயர் பாரில் பாய்ந்தவன்மேல், உடன் மாருதி பாய்ந்தான். |
ஏய்ந்து எழு தேர்- (அனுமனால்) எடுத்து எறியப்பட்டு மேல் எழுந்த தேர்; இமிழ் விண்ணினை எல்லாம் - ஒலிக் குணம் உடைய ஆகாய வெளி எங்கும்; ஓடி நீந்தியது - விரைந்து கடந்ததாகி; நிமிர்ந்தது வேகம் - வேகத்தால் மிகுந்தது; ஓய்ந்தது - பின்னர் வேகம் குறைந்து போய்; வீழ்வதன் முன் - கீழே விழுவதற்கு முன்னமே; உயர் பாரில் பாய்ந்தவன் மேல் - சிறந்த பூமியில் பாய்ந்து குதித்த அவ்வரக்கர் தலைவன் மீது; உடன் மாருதி பாய்ந்தான் - உடனே அனுமன் பாய்ந்தான். |