பக்கம் எண் :

பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்613

போருக்குரிய ஆயுதம்இல்லாதவரான அரக்கர் இருவரும்; எஞ்சார் - பின்
வாங்காதவர்களாய்; வானிடை நின்று - ஆகாயத்திலிருந்து கொண்டே;
உயர்மல்லின் மலைந்தார் - சிறந்த மற் போரினால் (அனுமானோடு)
பொருதார்கள்.

     கால் -வில்லின் நுனிகளைக் குறிக்கும். ‘ஒரு தனு இரு கால் வளைய’
என்ற திருவெழுகூற்றிருக்கையில் ‘கால்’ வில் நுனியைக் குறித்தது காண்க.
(திருஞானசம்பந்தர் முதல் திருமுறை).                            (60)

5661.

வெள்ளை எயிற்றர், கறுத்து உயர் மெய்யர்,
பிள்ள விரித்தபிலப் பெரு வாயர்,
கொள்ள உருத்து அடர் கோள் அரவு ஒத்தார்;
ஒள் இகல்வீரன், அருக்கனை ஒத்தான்.

     வெள்ளைஎயிற்றர் - வெண்மையான பற்களைஉடையவர்களும்;
கறுத்து உயர் மெய்யர் - கரு நிறத்தோடு உயர்ந்த உடலை உடையவர்களும்;
பிள்ள விரித்த பிலப்பெருவாயர் - பிளக்கும்படியாக விரிந்து விளங்கிய
பெரிய குகை போன்ற வாய்களை உடையவர்களுமான அவ்வரக்கர் இருவரும்;
கொள்ள உருத்து அடர் கோள் அரவு ஒத்தார் - உட்கொள்ளும்படி
கோபித்து நெருங்கி வருகின்ற வலிய இராகு கேது என்னும் பாம்புகளை
ஒத்தனர்; ஒள் இகல் வீரன் - சிறந்த பராக்கிரமத்தை உடைய வீரனாகிய
அனுமன்; அருக்கனை ஒத்தான் - சூரியனைப் போல விளங்கினான்.

     முதலில் இராகுகேதுக்களால் சூரியன் விழுங்கப்பட்டது போல்
காணப்பட்டாலும், பிறகு, உட்கொள்ளப் படாமல் ஒளியோடு விளங்குவது
போல, முதலில் அரக்கரால் அனுமன் தாக்கப்பட்டாலும், உடனே அவர்களை
வென்று விளங்குவான் என்பது கருத்து. அடுத்த பாடல் காண்க ‘வெள்ளை
எயிற்றர் கறுத்து உயர் மெய்யர் - முரண்தொடை.                  (61)

5662.

தாம்பு எனவாலின் வரிந்து, உயர் தாளோடு
ஏம்பல் இலார்இரு தோள்கள் இறுத்தான்;
பாம்பு எனநீங்கினர், பட்டனர் வீழ்ந்தார்-
    
ஆம்பல்நெடும் பகைபோல் அவன் நின்றான்.

     ஏம்பல் இலார் -சிறிதும்சலியாது போர் செய்த அவ்வரக்கர்
இருவருடைய; உயர் தாளோடு இரு தோள்கள் - நீண்ட