கால்களையும் இரண்டுதோள்களையும்; வாலின் - தனது வாலினால்; தாம்பு என வரிந்து - தாம்புக் கயிற்றால் கட்டுவது போலக்கட்டி; இறுத்தான் - (அனுமன்) ஒடித்தான்; பாம்பு என நீங்கினர் - இராகு கேதுக்கள் என்னும் பாம்புகள் போல் நீங்கியவர்களாய்; பட்டனர் வீழ்ந்தார் - இறந்து கீழே வீழ்ந்தனர்; அவன் - அந்த அனுமன்; ஆம்பல் நெடும் பகை போல் நின்றான் - அல்லிக்கு நெடும் பகைவனான சூரியன் போன்று ஒரு வித இடையூறும் இல்லாமல் நின்றான். முன்பாட்டில்அரக்கர் இருவரைப் பாம்பாகவும் அனுமனை அருக்கனாகவும் (சூரியனாகவும்) செய்த கற்பனையின் வளர்ச்சி இப்பாடலில் காணப்படுகிறது. அரக்கர் தலைவர் இருவரும் பாம்புகளாகவும் அனுமன் கதிரவனாகவும் கூறப்பட்டனர். சூரியனைக் கண்ட ஆம்பல் மலர் கூம்பிச் சோரும் ஆதலால் சூரியனை ஆம்பலுக்குப் பகைவன் என்பது கவிமரபு. ஞாயிறு கண்ட ஆம்பல் அழியும் ‘ஓம்பு திங்களும் வந்து சுடர்கண்ட, ஆம்பலாய் மலர்க் காடொத்தழிந்ததே’ (சீவக -2336) (62) | 5663. | நின்றனன்ஏனையன்; நின்றது கண்டான்; குன்றிடை வாவுறுகோள் அரி போல, மின் திரி வன்தலைமீது குதித்தான்; பொன்றி, அவன்,புவி, தேரொடு புக்கான். |
ஏனையன்நின்றனன் - ஐவருள் மீதியாய்இருந்த ஒருவன் எதிர்த்து நின்றான்; நின்றது, கண்டான் - அவ்வாறு தன்னை எதிர்த்து நின்றதைக் கண்டவனாகிய அனுமன்; குன்று இடை வாவுறு கோள் அரி போல - குன்றினிடத்துத்தாவும் வலிய சிங்கம் போல; மின் திரி வன் தலை மீது குதித்தான் - ஒளி வீசுகின்ற (அரக்கனது) வலிய தலையின் மேல் குதித்தான்; அவன் பொன்றி தேரொடும் புவி புக்கான் - அந்த அரக்கன் இறந்து தன் தேரோடு பூமியில் அழுந்தினான். (63) அறுசீர் ஆசிரியவிருத்தம் | 5664. | வஞ்சமும்களவும் வெஃகி, வழி அலா வழிமேல் ஓடி, நஞ்சினும்கொடியர் ஆகி, நவை செயற்கு உரிய நீரார், |
|