பக்கம் எண் :

62சுந்தர காண்டம்

அனுமன் கேட்டான்.சாயாவரம் - நிழல்மூலமாக ஆட்களை இழுக்கும் வரம்.
நிலை - தன்மை. நில்லா உலகின்நிலை   (கம்ப.3289)               (80)

4821. 

பெண்பால்எனக்கருது பெற்றியொழி உற்றால்
விண்பால்அவர்க்குமுயிர் வீடுறுதல் மெய்யே
கண்பால்அடுக்கவுயர் காலன்வரு மேனும்
உண்பேன்ஒருத்தியது ஒழிப்பதரி தென்றாள்.

(அனுமன் மொழி கேட்டஅங்கார தாரை)

     பெண்பால்எனக்கருது பெற்றி ஒழி -  (என்னை) ஒருபெண்தானே
என்று நினைக்கும் தன்மையை விட்டுவிடு; உற்றால் - என்எதிரே வந்தால்;
விண்பால் அவர்க்கும் - தேவ லோகத்தில் உள்ள தேவர்க்கும்; உயிர்
வீடுறுதல் மெய்யே -
உயிரானது உடம்மை விடுதல் உறுதியாகும்; கண்பால்
-
என்னுடைய கண்ணின் பக்கம்; உயர் காலன் அடுக்க வருமேனும் -
யமன் அணுக வருமேயாயினும்;
உண்பான் அருத்தியது -உண்ணவிரும்பிய
செயலை; ஒழிப்பது அரிது -விலக்க முடியாது; என்றாள் - என்று
கூறினாள்.

     அரக்கி அனுமனைநோக்கி “என்னைப் பெண்தானே என்று கருதாதே;
எனக்கு முன் வந்தால் உண்பேன்” என்று கூறினாள். பெற்றி - தன்மை.
வீடுவது - அழிவது. மெய் -உறுதி.                              (81)
 

அனுமன் அங்காரதாரை வயிற்றைக் கிழித்தேகல்

4822. 

திறந்தாள்எயிற்றை, அவள்; அண்ணலிடை சென்றான்
அறந்தான்அரற்றியது அயர்த்தமரர் எய்த்தார்
இறந்தான்எனக்கொடுஓர் இமைப்பதனின் முன்னம்
பிறந்தான்எனப்பெரிய கோளரி பெயர்ந்தான்.

     அவள் திறந்தாள்எயிற்றை - (அனுமனை விழுங்க)அங்காரதாரை
வாயைத் திறந்தாள்; அண்ணல் - பெருமையை உடைய அனுமன்; இடை -
அந்த வாயின் வழியில்; சென்றான் - போனான்; இறந்தான் எனக்கொடு -
அனுமன் இறந்து விட்டான் என்று நினைத்துக்கொண்டு; அறம் அரற்றியது -
அறக்கடவுள் கதறியது; அமரர் எய்த்தார் - தேவர்கள் வருந்தினர்; பெரிய
கோளரி -
பெரிய சிங்கம் போன்ற அனுமன்; ஓர் இமைப்பதனின் முன்னர்
-
ஒருமுறை கண்ணை இமைப்பதற்கு முன்பு; பிறந்தான் என -