பக்கம் எண் :

அக்ககுமாரன் வதைப் படலம்621

சிறு பழி இழைக்கும்கற்பால் - ஒரு சிறியஅவமதிப்பைச் செய்ய வேண்டும்
என்ற நினைவினால்; கைதவம் கண்ணி - வஞ்சனையைக் கருத்தில் எண்ணி;
கொய் தளிர் கோதும் வாழ்க்கை -
கொய்யும் தளிர்களை மெதுவாகக்
கடித்துத் தின்னும் எளிய வாழ்வை உடைய; கோடரத்து உருவு கொண்டு
எய்தினான் -
அற்பக்குரங்கினது வடிவத்தைக் கொண்டு வந்துள்ளான்; என்ற
போதும் -
என்றாலும்; நொய் தினின் வென்று - (அவனை) எளிதில்
வென்று; நொடியின் பற்றி, நுன் பால் தருகு வென் - வெகு விரைவில்
பிடித்து உன்னிடம் கொணர்ந்து விட்டுவிடுவேன்.                   (4)

5672.

‘துண்டத்தூண் அதனில் தோன்றும் கோளரி, சுடர்
                             வெண் கோட்டு
மண் தொத்தநிமிர்ந்த பன்றி ஆயினும், மலைதல்
                             ஆற்றா;
அண்டத்தைக்கடந்து போகி அப் புறத்து அகலின்
                             என்பால்
தண்டத்தை இடுதிஅன்றே, நின்வயின்
                            தந்திலேனேல் !’

     துண்டத் தூண்அதனில் தோன்றும் கோள் அரி -
துண்டமாகிய ஒரு கம்பத்திலிருந்து தோன்றிய பற்றுதல்வல்ல நரசிங்கமானாலும்;
சுடர்வெண் கோட்டு மண்தொத்த நிமிர்ந்த பன்றி ஆயினும் -
ஒளியை
உடைய வெள்ளிய பல்லில், இந்தப் பூமி ஒரு துகள் போலத் தொத்திக்
கொண்டிருக்க, ஓங்கி வளர்ந்த வராகமே ஆனாலும், (அவையும்); மலைதல்
ஆற்றா -
என்னுடன் பொருதற்குத் தரமுடையன அல்ல; அண்டத்தைக்
கடந்து போகி அப்புறத்து ஆகலின் -
(அந்தக்குரங்கு) அண்ட கோளத்
தைத்தாண்டி, அப்பாற் சென்று, புற அண்டத்தி்ல் அகன்று
சென்றாலும்; நின்வயின் தந்திலேனேல் - (யான் அதைப் பிடித்துக்
கொண்டு வந்து)உன்னிடத்துத் தராது விட்டேன் என்றால்; தண்டத்தை
இடுதி -
அதற்குரியதண்டனையை எனக்கு விதிப்பாய்.

     கோள் அரி;கொள்ளுதல் வல்ல சிங்கம்; கொண்ட இலக்கைத் தப்பாமல்
பற்றுதல் என்பது கோள் என்ற சொல்லின் குறிப்பு. முதனிலை நீண்ட தொழிற்
பெயர். அன்று, ஏ; அசைகள். நரசிங்கமும், வராகமுமே கூட என்னுடன்
பொரமுடியாதவை. இந்தக் குரங்கு எம்மாத்திரம்