| 5676. | ஆறு-இரண்டு அடுத்த எண்ணின் ஆயிரம் குமரர், ஆவி வேறு இலாத்தோழர், வென்றி அரக்கர்தம் வேந்தர் மைந்தர், ஏறிய தேரர்,சூழ்ந்தார்-இறுதியின் யாவும் உண்பான் சீறிய காலத்தீயின் செறி சுடர்ச் சிகைகள் அன்னார். |
இறுதியின் யாவும்உண்பான் - யுகமுடிவுக் காலத்தில்உலகப் பொருள்கள் அனைத்தையும் அழிக்கும் பொருட்டு; சீறிய காலத் தீயின் - பொங்கி எழுந்த ஊழித் தீயின்; செறி சுடர் சிகைகள் அன்னார் - நெருங் கியஒளியை உடைய நெருப்புச் சுடர்க் கொழுந்துகள் போன்றவர்களும்; ஆவிவேறு இலாத தோழர் - (அக்ககுமாரன் அன்றி) தமக்கு வேறு உயிர் இல்லாதநண்பர்களும்; வென்றி அரக்கர்தம் வேந்தர் மைந்தர் - வெற்றியை உடைய அரக்கர் குல அரசர்களின் புதல்வர்களுமாகிய; ஆறு இரண்டுஅடுத்த எண்ணின் ஆயிரம் குமரர் - பன்னீராயிரம் குமாரர்கள்; ஏறியதோர் சூழ்ந்தார் - தேர்களில் ஏறினவர்களாய் அக்ககுமாரனைச் சூழ்ந்துகொண்டார்கள். (9) | 5677. | மந்திரக்கிழவர் மைந்தர், மதி நெறி அமைச்சர் மக்கள், தந்திரத்தலைவர் ஈன்ற தனயர்கள், பிறரும், தாதைக்கு அந்தரத்து அரம்பைமாரில் தோன்றினர் ஆதி ஆனோர், எந்திரத்தேரர், சூழ்ந்தார்-ஈர்-இரண்டு இலக்கம் வீரர். |
மந்திரக்கிழவர் மைந்தர் - மந்திராலோசனைக்குரியோருடைய குமாரர்கள்; மதி நெறி அமைச்சர் மக்கள் - புத்தியில் மிக்க மந் திரிகளுடையமைந்தர்கள்; தந்திரத் தலைவர் ஈன்ற தனயர்கள் - சேனைத்தலைவர்கள்பெற்ற புதல்வர்கள்; தாதைக்கு அந்தரத்து அரம்பை மாரில், தோன்றினர்ஆதி ஆனோர் பிறரும் - தந்தையாகிய இராவணனுக்குத் தேவலோகத்துத்தெய்வமகளிரிடம், பிறந்த புத்திரர் முதலிய பிறரும் ஆகிய; ஈர் இரண்டுஇலக்கம் வீரர் - நான்கு லட்சம் வீரர்கள்; எந்திரத் தேரர் |