பக்கம் எண் :

அக்ககுமாரன் வதைப் படலம்625

சூழ்ந்தார் - எந்திரமுள்ளதேரின் மீது ஏறியவர்களாய், அக்க குமாரனைச்
சூழ்ந்து கொண்டு போருக்குச் சென்றனர்.

     அக்ககுமாரனுடன்சென்ற நான்கு லட்சம் வீரர்களின் வகை
கூறப்பட்டது. மந்திரக் கிழவர் முதல்வராகக் கூறியவர் நால்வராதலால்,
ஒவ்வொருவகையினரின் குமாரரும் ஒவ்வொரு லட்சம் வீரர் என்க. அந்தரம் -
மேலுலகம், விண்ணுலகம்.                                     (10)

5678.

தோமரம்,உலக்கை, சூலம், சுடர் மழு, குலிசம்,
                           தோட்டி,
ஏ மரு வரி வில்,வேல், கோல், ஈட்டி, வாள், எழு,
                            விட்டேறு,
மா மரம், வீசுபாசம், எழு முளை, வயிரத் தண்டு,
காமரு கணையம்,குந்தம், கப்பணம், கால நேமி

     தோமரம் -தண்டாயுதம்; உலக்கை, சூலம் - உலக்கைகள், திரி
சூலங்கள்; சுடர் மழு, குலிசம் -  ஒளிவீசும் கோடாலிகள், வச்சிராயுதங்கள்;
தோட்டி -
அங்குசங்கள்; ஏமரு வரி வில் - அம்பு பொருந்திய கட்டமைந்த
விற்கள்; வேல் கோல் - வேலாயுதங்கள் அம்புகள்; ஈட்டி, வாள் -
எறியீட்டிகள், வாள்கள்; எழு, விட்டேறு - இரும்புத்தடிகள், எறிகோல்கள்;
மாமரம் -
பெரிய மரங்கள்; வீசு பாசம் - வீசுதற்குரிய கயிறுகள்; எழு
முளைவயிரத் தண்டு -
பகைவர் மேல் எழுகிற வயிரத்தாலான
தண்டாயுதங்கள்; காமரு கணையம் குந்தம் - அழகு பொருந்தியவளைதடிகள்
குத்துக் கோல்கள்; கப்பணம் - யானை நெருஞ்சி முட்கள்; காலநேமி -
தவறாமல் கொல்லவல்ல சக்கராயுதங்கள்.....

     அடுத்த பாடலுடன்முடியும். அரக்க வீரர்கள் கொண்டு சென்ற
போர்க்கருவிகளின் வகைகள் கூறப்பட்டன.                        (11)

5679.

என்று, இவைமுதல ஆய எறிதரு படைகள் ஈண்டி,
மின் திரண்டனையஆகி, வெயிலொடு நிலவு வீச,
துன்று இருந் தூளிபொங்கித் துறுதலால்,
                              இறுதிசெல்லாப்
பொன் திணிஉலகம் எல்லாம், பூதலம் ஆய மாதோ !

     என்று இவை முதலஆய - என்று சொல்லப்படுகின்ற இவை முதலாக
உள்ள; எறிதரு படைகள் ஈண்டி - தாக்குதற்குரிய ஆயுதங்கள்
நெருங்கியதனால்; மின் திரண்ட அனைய ஆகி -