மின்னல்கள் ஒரு சேரத்திரண்டாற் போன்று; வெயிலொடு நிலவு வீச - வெயிலையும் நிலாவையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்க; துன்று இரும் தூளி பொங்கிதுறுதலால் - நெருங்கியமிக்க தூளிகள் மேலெழுந்து (வானத்தில்) நெருங்கியதனால்; இறுதி செல்லா - முடிவுக் காலம் இது என்று கணிக்க முடியாத; பொன் திணி உலகம் எல்லாம் - பொன் திணித்து அமைக்கப்பெற்ற சுவர்க்க உலகம் யாவும்; பூதலம் ஆய - நில உலகம் போன்று விளங்கின.                                          (12) |     5680. | காகமும்,கழுகும், பேயும், காலனும், கணக்கு இல்                               காலம்     சேகு உறவினையின் செய்த தீமையும், தொடர்ந்து                            செல்ல;     பாகு இயல்கிளவிச் செவ் வாய்ப் படை விழிப்                         பணைத்த வேய்த் தோள்     தோகையர்மனமும், தொக்க தும்பியும், தொடர்ந்து                             சுற்ற;  |  
     காகமும்,கழுகும்,பேயும் காலனும் - காகங்களும், கழுகுகளும் பேய்களும் யமனும்; கணக்கு இல் காலம் சேகு உற வினையின் செய்த தீமையும் - பலகாலம் திண்மை உண்டாக (அவ்வரக்கர்கள் தமது) செயலால் செய்த பாவமும்; தொடர்ந்து செல்ல - அக்ககுமாரனது படையுடன் பின் தொடர்ந்து செல்ல; பாகு இயல் கிளவிச் செவ்வாய் - பாகின் இனிமை வாய்ந்த சொற்களையும் சிவந்த வாயையும்; படை விழிப் பணைத்த வேய்த் தோள் - வேலாயுதம் போன்ற கண்களையும், பருத்த மூங்கில்கள் போன்ற தோள்களையும் உடைய; தோகையர் மனமும் - மயில் போன்ற சாயலையுடைய அரக்கிமார்களது மனமும்; தொக்க தும்பியும் தொடர்ந்து சுற்ற - தொகுதியான வண்டுக் கூட்டங்களும் அவர்களைத் தொடர்ந்து சுற்றிச் செல்லவும்.      ‘மாற்றங்கள்ஒழிப்ப’ என்று அடுத்த கவியோடு தொடரும். அக்ககுமாரன் பேரெழுச்சி கூறப்பட்டது. போரி் அக்க குமாரனுக்கு உதவி செய்வோர், பயன்படும் கருவிகள் ஆகிய விவரங்கள் கூறப்பட்டன. போரில் நிகழவிருக்கும் அழிவுகளை எதிர்நோக்குவனவும், போர்க்குச் செல்வோரை நினைந்து இரங்கும் பரிவுக்கு உரியோரும் பற்றியது இக்கவி.                    (13)  |