பக்கம் எண் :

அக்ககுமாரன் வதைப் படலம்629

     மாது, ஓ: அசைநிலைகள். ‘காற்றின் சேய் வரவு கண்டான்’ என அடுத்த
கவியோடு முடியும். பகற்காலத்தே மேக மூட்டம் நேரிடின் ஒளி குறையும்,
இங்கே இருள் இல் விண் என்றது மேக மூட்டத்தால் இருள் சூழாத
ஆகாயத்தைச் சுட்டிற்று. பகற் காலத்தில்மேகம் இல்லாமல், திடீரென்று மேகம்
கூடி இடி முழங்கிவெள்ளிடி என்பர். இது தீய சகுனம். இங்கு, குறிக்கப் பெற்ற
அனைத்தும்அக்ககுமாரனுக்கும் அவன் படைக்கும் இனி உண்டாகும் கேட்டை
உணர்த்தும்உற்பாதங்கள் (தீய குறிகள்) ஆகும்.                   (16)

5684.

வெள்ள வெஞ் சேனை சூழ, விண் உளோர் வெருவி
                          விம்ம,
உள்ளம் நொந்துஅனுங்கி, வெய்ய கூற்றமும் உறுவது
                          உன்ன,
துள்ளிய சுழல் கண் பேய்கள் தோள் புடைத்து
                          ஆர்ப்ப தோன்றும்
கள் அவிழ்அலங்கலானைக் காற்றின் சேய் வரவு
                          கண்டான்.

     வெள்ள வெஞ்சேனைசூழ - வெள்ளம் என்னும் கணக்கான கொடிய
சேனைகள் தன்னைச் சூழ்ந்து வரவும்; விண் உளோர் வெருவி விம்ம -
தேவர்கள் அஞ்சிக் கலக்கம் அடையவும்; உள்ளம் நொந்து அனுங்கி,
வெய்ய கூற்றமும் உறுவது உன்ன -
மனம் வருந்தியிருந்த கொடிய யமனும்
எது என்ன ஆகுமோ என அழுங்கி நிற்கவும்; துள்ளிய சுழல் கண் பேய்கள்
-
மகிழ்ச்சியால் துள்ளியனவும் சுழல்கின்ற கண்களை உடையனவுமாகிய
பேய்கள்; தோள் புடைத்து ஆர்ப்ப - தம் தோள்களைக் கொட்டி
ஆரவாரம்செய்யவும்; காற்றின் சேய் - வாயுவின் மகனாகிய அனுமன்;
தோன்றும் கள்அவிழ் அலங்கலானை -
விளக்கமாகத் தெரியும் தேன்
சொரியும் மாலைஅணிந்த அக்ககுமாரனின்; வரவு கண்டான் - வருகையைப்
பார்த்தான்.

     அனுமன் பார்த்தபோது, அக்ககுமாரனது வருகை எப்படி
அமைந்திருந்தது என்பதைத் தெரிவிக்கின்றது இப்பாடல். அலங்கலானைப்
பார்த்தான்; வரவு பார்த்தான் எனத் தனித்தனி கூட்டிப் பொருள் கொள்க.
வெள்ளம் - ஒருபேரெண். பேய் ஆர்ப்ப என்பதால் அரக்கர் அழிவு
குறித்ததாயிற்று.                                              (17)