பக்கம் எண் :

அக்ககுமாரன் வதைப் படலம்631

     எண்ணிய -(நான்இப்போது போருக்கு வருபவராக) நினைத்த;
இருவர்தம்முள் ஒருவனேல் -
இந்திரசித்து, இராவணன் என்ற
இருவர்களுள்ஒருவனாக இருந்தால்; யான் முன் செய்த புண்ணியம் உளது
-
யான்முற்பிறப்பில் செய்த புண்ணியப்பயன் எனக்கு உள்ளது; எம் கோன்
தவத்தொடும் பொருந்தினானே -
எங்கள் தலைவனான சுக்கிரீவனும் செய்த
தவப்பயன் பொருந்தப் பெற்றவனானான்; நானும் நண்ணினன் நின்றேன் -
(பல அரக்கர்களைக் கொன்றிட்ட) நானும் (இவனைக் கொல்வதற்கு) சித்தனாக
நிற்கின்றேன்; காலனும் நணுகி நின்றான் - (இவன் உயிரைக் கொண்டு
போவதற்கு) யமனும் நெருங்கி நிற்கின்றான்; கண்ணியகருமம் இன்றே
கடிதின் முடிக்குவென் -
யான் கருதிய காரியத்தை இன்றைக்கே விரைவில்
முடித்து விடுவேன்; என்றான் - என்று (அனுமன்) தனக்குள் சொல்லிக்
கொண்டான்.                                             (19)

5687.

‘பழி இலதுஉரு என்றாலும், பல் தலை அரக்கன்
                         அல்லன்;
விழிகள்ஆயிரமும் கொண்ட வேந்தை வென்றானும்
                         அல்லன்;
மொழியின், மற்று அவர்க்கு மேலான்; முரண்
                     தொழில் முருகன் அல்லன்;
அழிவு இல் ஒண்குமரன் யாரோ, அஞ்சனக் குன்றம்
                        அன்னான் ?’

     அஞ்சனக் குன்றம்அன்னான் - மைந் நீலமலை போலவிளங்குகின்
றஇவன்; உருபழி இலது என்றாலும் - இவனுடைய வடிவம்
குற்றம் அற்றதுஎன்றாலும்; பல் தலை அரக்கன் அல்லன் - பத்துத்
தலைகளை உடையஅரக்கனாகிய இராவணன் அல்லன்; விழிகள் ஆயிரமும்
கொண்ட வேந்தைவென்றானும் அல்லன் -
ஆயிரம் கண்களைக் கொண்ட
தேவேந்திரனைவென்ற இந்திரசித்தும் அல்லன்; மொழியின் - ஆராய்ந்து
கூறுமிடத்து; மற்றுஅவர்க்கு மேலான் - மற்றைய அவர்களுக்கும்
(இராவணன் மேகநாதன்)மேம்பட்டவனாகத் தோன்றுகின்றான்; முரண்
தொழில் முருகன் அல்லன் -
போர்த் தொழிலிற் சிறந்த முருகக் கடவுளும்
அல்லன்; அழிவு இல் குமரன்யாரோ ? - கேடு என்பதே இல்லாத
பராக்கிரமமுடைய இக் குமரன் யாரோ?.

      அனுமன் முன்பேஇராவணனையும் இந்திரசித்தையும் பார்த்தவன்
[ஊர்தேடு படலம் (4974. 5040 - 5052 காண்க] ஆதலால்