வந்திருப்பவன்அவர்களில் ஒருவனல்லன் எனத் தெளிந்தான். போர்த்தொழில் வல்லமையும் வெல்லும் திறனும் உடைய சேவகப் பெருமாளாகிய முருகனை வீரர்க்கு உவமை சொல்வது மரபு; ‘கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி உடம்பிடித் தடக்கை ஓடா வம்பலர்’ (பெரும்பாண் 75-76) எனவும், வென்றி நெடுவேள் (குறுந். 111) எனவும் வந்தன. அறநெறியில் செல்லாத அரக்கர் சார்பினனாக முருகன் வாரான் என்பதால் வருபவன் முருகன் அல்லன் எனத் தெளிந்தான். விழிகள் ஆயிரம் கொண்ட இந்திரனை வென்றவன் மேகநாதன்; இவ்வெற்றியால் இந்திரஜித் எனப் பெயர் பெற்றான். இராவணனுக்கும் இந்திரசித்துக்கும் மேலான பெருவீரம் படைத்தவன் அக்ககுமாரன் எனப் பார்த்த அளவில் கணிக்கிறான் அனுமன். (20) அக்ககுமாரன்,அனுமனை இழித்துப்பேசிய போதுதேர்ப்பாகன், ‘தகாது’ எனல் | 5688. | என்றவன்,உவந்து, விண் தோய் இந்திர சாபம் என்ன நின்றதோரணத்தின் உம்பர் இருந்த ஓர் நீதியானை, வன் தொழில்அரக்கன் நோக்கி, வாள் எயிறு இலங்க நக்கான்; ‘கொன்றதுஇக்குரங்கு போலாம், அரக்கர்தம் குழாத்தை !’ என்றான். |
என்றவன் -என்றுஐயுற்றவனாகி; உவந்து - மகிழ்வுற்று; விண் தோய் இந்திர சாபம் என்ன நின்ற தோரணத்தின் உம்பர் - வானத்தில் பொருந்திய இந்திர வில்லைப் போல பல நிறத்துடன் விளங்குவதான தோரண வாயிலின் மீது; இருந்த ஓர் நீதி யானை - தங்கியிருந்த ஒப்பற்ற நெறியுடையவனான அனுமனை; வன் தொழில் அரக்கன்நோக்கி - கொடுந்தொழிலையுடையஅக்ககுமாரன்பார்த்து; அரக்கர் குழாத்தைக் கொன்றது இக் குரங்கு போலாம் என்றான்- அரக்கர் கூட்டத்தை எல்லாம் கொன்றது இந்தச் சிறு குரங்குதானா என்றுகூறி; வாள் எயிறு இலங்க நக்கான் - ஒளி தங்கிய தன் பற்கள் தோன்றுமாறுஏளனமாகச் சிரித்தான். அனுமனின் உவப்புக்குக்காரணம் நல்ல போருக்கு வாய்ப்பு வரவிருப்பது குறித்து. அனுமன், அரக்கனை எண்ணியது முதல் பாட்டில். இங்கு, அரக்கன் அனுமனை எண்ணியது கூறப்பட்டது. இரண்டு எண்ணங்களின் வேறுபாடு நோக்கத்தக்கது. (21) |