பக்கம் எண் :

அக்ககுமாரன் வதைப் படலம்641

சிலர் குறைகின்றார் -சிலஅரக்க வீரர்கள் இறந்தொழிந்தார்கள்; பலர்
உடல் குலைகின்றார் -
மற்றும் பல அரக்கர்கள் உடல் நடுக்குற்றனராய்;
பின்றா நின்றனர் -
பின்னிட்டுச் சென்றவராயினர்; உதிரப் பெருநிதி
பெருகாநின்றன -
இரத்த பேராறுகள் பெருகத் தலைப்பட்டன; அருகு
நின்றார்ஆரும் நின்றிலர் -
(அவ்வக்ககுமாரனுக்கு) அருகில் நின்றவர்கள்
எவரும்அங்கே நிற்க மாட்டாமல் அப்புறம் சென்று விட்டனர்; தனி
நின்றான் -
(துணையின்றி) தனித்து நின்ற அக்ககுமாரனும்; ஒரு நேமித்
தேரொடும் -
ஒப்பற்ற சக்கரங்களை உடைய தேரோடும்; அவன் நேரே
சென்றான் -
அந்த அனுமனுக்கு எதிரே சென்றவனாகி; விழி எரி கின்றான்
-
(கோபத்தால்) கண்கள் நெருப்பு எரிவது போல் விளங்க; வன் திறல்
அயில்வாய் அம்புகள் தெரிகின்றான் -
மிக்க திறமை வாய்ந்த கூரிய
முனைகளைஉடைய அம்புகளை அனுமன் மீது தேர்ந்து விடுகின்றவனானான்.
                                                           (31)

5699.

உற்றான்இந்திரசித்துக்கு இளையவன்;
     ஒரு நாளேபலர் உயிர் உண்ணக்
கற்றானும் முகம்எதிர் வைத்தான்; அது
     கண்டார்விண்ணவர்; கசிவுற்றார்;
‘எற்றாம் மாருதி நிலை ?’ என்பார்; இனி
     ‘இமையாவிழியினை இவை ஒன்றோ
பெற்றாம்;நல்லது பெற்றாம்’ என்றனர்;
     பிறியாது எதிர் எதிர் செறிகின்றார்.

     இந்திரசித்துக்கு இளையவன் உற்றான் - இந்திரசித்தனுக்குத்
தம்பியாகிய அந்த அக்ககுமாரனும் (அனுமனுக்கு) எதிரே வந்தடைந்தான்; ஒரு
நாளே பலர் உயிர் உண்ணக் கற்றானும் -
ஒரு நாளிலேயே பல
லட்சக்கணக்கான வீரர் உயிர்களை அழிக்கப் பழகியவனான அனுமனும்;
முகம் எதிர் வைத்தான் - அவனுக்கு எதிர்முகமாய் நின்றான்; அது
கண்டார் விண்ணவர் -
அந்நிலையைக் கண்ட தேவர்கள்; கசிவு உற்றார் -
மனம் இரங்கியவர்களாய்; மாருதி நிலை எற்றாம் - (இனி) அனுமனுடைய
நிலை யாது ஆகுமோ; என்பார் - என்று மனத்தில் துணுக்குக் கொண்டு
கூறுபவர்களாய்; இனி - இப்பொழுது; இமையா விழியினை இவை ஒன்றோ
பெற்றாம் -
இமையாக்கண்களை உடைமையாகிற இந்த ஒரு சிறப்பைப்
பெற்றிருக்கின்ற நாங்கள்;