5701. | தேரில்சென்று, எதிர் கோல் கொள்வான் உயிர் தின்றான்;அப் பொரு செறி திண் தேர், பாரில் சென்றது;பரி பட்டன; அவன் வரி வில்சிந்திய பகழிக் கோல், மார்பில்சென்றன சில; பொன் தோளிடை மறைவுற்றனசில; அறவோனும், நேரில் சென்று,அவன் வயிரக் குனி சிலை பற்றிக்கொண்டு, எதிர் உற நின்றான். |
தேரில் சென்று -(பாய்ந்தஅனுமன்) தேரிலே நின்று; எதிர் கோல் கொள்வான் உயிர் தின்றான் - எதிரேயுள்ள உளவுகோலைக் கையில் கொண்டுள்ள சாரதியின் உயிரை அழித்தான்; அப் பொரு செறிதிண் தேர் பாரில் சென்றது - (பின்னும் அனுமன் தனது கையால் நொறுக்கியதால்) அந்த ஒப்பற்ற கெட்டியான வலிய தேர், (சின்னா பின்னப்பட்டு) தரையில் விழுந்து விட்டது; பரிபட்டன - குதிரைகள் இறந்தன; அவன் வரிவில் சிந்தியு பகழிக்கோல் சில - அந்த அக்ககுமாரன், தன் கட்டுகள் அமைந்த வில்லினால்பொழிந்த அம்புகளில் சில; மார்பில் சென்றன - அனுமன் மார்பில்பாய்ந்தன; சில பொன் தோளிடை மறைவுற்றன - மற்றும் சில அம்புகள்அனுமனது பொன்போன்ற தோளின் மேல் பாய்ந்து மறைவுற்றன; அறவோனும் - அறவோனாகிய அனுமனும்; நேரில் சென்று - நேராகப் போய் நின்று; அவன் வயிரக் குனி சிலை பற்றிக்கொண்டு - அக்ககுமாரனது வலிய வளைந்த வில்லைப் பிடுங்கிக் கொண்டு; எதிர் உற நின்றான் - அவன் எதிரிலே நின்றான். பகழிக் கோல் -அம்பு. அறவன் என முன்னரும் (5512) அனுமன் குறிக்கப்பட்டான். (34) 5702. | ஒரு கையால்அவன் வயிரத் திண் சிலை உற்றுப்பற்றலும், உரவோனும், இரு கையால் இவன்வலியாமுன்னம், அது இற்றுஓடியது; இவர் பொன் தோளின், சுரிகையால் அவன்உருவிக் குத்தலும், அதனை,சொல் கொடு வரு தூதன், பொரு கையால்இடை பிதிர்வித்தான், முறி பொறி ஓடும்படி பறியாவே. |
|