பக்கம் எண் :

644சுந்தர காண்டம்

     ஒரு கையால் அவன்வயிரத் திண் சிலை உற்றுப் பற்றலும் -
(அவ்வாறுஅனுமன் தனது) ஒரு கையினால், அக்ககுமாரனது உறுதியான
வலிய வில்லை நெருங்கிப் பிடுங்கிக் கொண்டதும்; உரவோனும் -
வலியவனான அக்ககுமாரனும்; இருகையால் வலியா முன்னம் - தனது
இரண்டு கைகளாலும். அந்த வில்லைப் பிடித்து இழுக்கும் முன்னம்; அது
இற்று ஓடியது -
அவ்வில் முறிந்து போய் விட்டது (பிறகு); அவன் - அந்த
அக்ககுமாரன்; இவர் பொன் தோளின் தன் கரிகையால் உருவி குத்தலும் -தன் உடை வாளினால், உயர்ந்த அழகிய (அனுமனது) தோளின் மேல்
குத்தியதும்; அதனை - அந்த உடை வாளை; சொல்கொடு வரு தூதன் -
(இராமபிரானது) சொல்லைச் சீதாபிராட்டியினிடம் சொல்லுமாறு கொண்டு வந்த
தூதனாகிய அனுமன்; பொருகையால் பறியா - தனது போர் புரியும்
கையினால் பறித்து; முதிர் பொறி ஓடும்படி இடை பிதிர்வித்தான் - மிக்க
நெருப்புப் பொறி எங்கும் பறந்து செல்லும்படி (தன் மேல் படுவதற்கு முன்)
நடுவழியிலேயே பொடியாக உதிரும்படிச் செய்தான்.                (35)

அனுமனோடு மற்போர்செய்து அக்ககுமாரன் மடிதல் 

5703.

வாளாலே பொரல் உற்றான், இற்று அது
     மண்சேராமுனம், வயிரத் திண்
தோளாலே பொரமுடுகிப் புக்கு, இடை
     தழுவிக்கோடலும், உடல் முற்றும்,
நீள் ஆர் அயில்என மயிர் தைத்திட, மணி
     நெடு வால்அவன் உடல் நிமிர்வுற்று
மீளாவகை, புடைசுற்றிக்கொண்டது;
     பற்றிக்கொண்டன் மேலானான்.

     வாளாலே பொரல்உற்றான் - வாள் கொண்டு போர்புரியத்
தொடங்கிய அக்ககுமாரன்; அது இற்று மண் சேரா முனம் - அந்த வாள்
ஒடிந்து தரையில் விழுவதற்கு முன்னம்; வயிரத்திண் தோளாலே பொர
முடுகி -
மிக்க வலிய தனது தோளினாலேயே போர் புரிய வேகமாக வந்து;
இடை புக்கு தழுவிக் கோடலும்  -
அவ்விடம் புகுந்து அனுமனைத் தழுவிக்
கொள்ள முயன்றபோது; உடல் முற்றும் - அக்ககுமாரனது உடல் முழுவதும்;
நீள் ஆர் அயில் என மயிர் தைத்திட -
நீட்சி பொருந்திய வேலாயுதம்
போல (அனுமனது) உரோமங்கள் குத்தி உட்புக; மணி நெடு வால் -