அனுமனுடைய அழகியநீண்டவால்; அவன் உடல் நிமிர் உற்று மீளாவகை - அந்த அக்ககுமாரனுடைய உடல் மேற்கிளம்பி மீளாதபடி; புடை சுற்றிக் கொண்டது - உடலின் எப்புறங்களிலும் சுற்றிப் பிணித்துக் கொண்டது; பற் றிக்கொண்டனன் - இவ்வாறு பற்றிக் கொண்ட அனுமன்; மேல் ஆனான் -(அவ்வரக்கனைக் கீழே தள்ளி அவன்) மேலே எழுந்து உட்கார்ந்துகொண்டான். (36) 5704. | பற்றிக்கொண்டவன், வடி வாள் என ஒளிர், பல் இற்றுஉக, நிமிர் படர் கையால் எற்றி,கொண்டலின் இடைநின்று உமிழ் சுடர் இன மின்இனம் விழுவன என்ன, முற்றிக்குண்டலம் முதல் ஆம் மணி உக, முழை நால்அரவு இவர் குடர் நால, கொற்றத் திண்சுவல், வயிரக் கைகொடு குத்தி,புடை ஒரு குதிகொண்டான். |
பற்றிக்கொண்டவன் - (தன் வாலினாலேஅக்ககுமாரனைப்) பற்றிக் கொண்டவனான அனுமன்; வடிவாள் என ஒளிர் பல் இற்று உக - கூரிய வாள் போன்று விளங்குகின்ற பற்கள் உதிரும்படி; நிமிர் படர்கையால் எற்றி - ஓங்கிய தன் அகன்ற கையினால் (கன்னத்தில்) அறைந்து; கொண்டலின் இடை நின்று உமிழ் சுடர் இனமின் இனம் விழுவன என்ன - மேகத்திடமிருந்து வருகின்ற ஒளி தங்கிய மின்னலின் கூட்டங்கள் கீழே விழுகின்றன போல; குண்டலம் முதலாம் மணி இற்று உக - குண்டலம் முதலிய ஆபரணங்களில் உள்ள இரத்தினங்கள் அழிந்து சிந்த; அரவு நால் முழை இவர் குடர் நால - பாம்பு குகையிடத்து தொங்கல் போல அவனுடைய குடல்கள் வெளியேதொங்க; கொற்றத்திண் சுவல் - வெற்றியைத் தரும் வலிய மேடு போல் உயர்ந்த; வயிரக் கை கொடும் குத்தி - உறுதியானதனது கையைக் கொண்டு அவனைக் குத்தி; ஒரு புடை குதி கொண்டான் -ஒரு புறத்தே குதித்தான். வயிறு குகைபோன்றது; சரிந்த குடல்கள் குகைவாயிலில் தொங்கும் கொடிகள் போன்றன. (37) 5705. | நீத்து ஆய்ஓடின உதிரப் பெரு நதி நீராக,சிலை பாராக, |
|