உரு ஆனார் - வேறு சிலஅரக்கர்கள் நான்கு வேதங்களை ஓதும் அந்தணர் உருவை எடுத்துக் கொண்டனர்; சிலர் - மற்றும் சில அரக்கர்கள்; மான் ஆர் கண் இள மடவார் ஆயினர் - மான்போன்ற கண்களை உடைய இளமகளிர் உருவைப் பெற்றவராய்; தம் குழல் முன்னே வகிர்வு உற்றார் ஆனார் - தம்கூந்தலை முன்புறம் வகிடு எடுத்துக் கொண்டவர் ஆயினர்; சிலர், ‘ஐயா, நின்சரண் என்றனர் - வேறுசிலர், ‘ஐயனே ! யாம் உன் அடைக்கலம் என்றார்கள்; நின்றவர் அரி என்றார் - மற்றுமுள்ளோர் அரி என்ற திருமால் திருநாமத்தைக் கூறினர். அனுமனுக்குஅஞ்சித் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் அரக்கர்கள் செய்த மாயச் செயல்கள் கூறப்பட்டன. அரி - குரங்கு என்றும் பொருள் - குரங்கு என்றது அச்சத்தில் கூறியதாம் - அது திருமால் நாமமாகக் கருதப்பட்டு உயிர் பெற்றார். (40) 5708. | தம்தாரமும், உறு கிளையும், தமை எதிர் தழுவும்தொறும், ‘நும தமர் அல்லேம்; வந்தேம்,வானவர்’ என்று, ஏகினர் சிலர்; சிலர்,‘மானுயர்’ என, வாய் விட்டார்; மந்தாரம் கிளர்பொழில்வாய் வண்டுகள் ஆனால்சிலர்; சிலர் மருள்கொண்டார்; இந்து ஆர்எயிறுகள் இறுவித்தார் சிலர்; எரிபோல்குஞ்சியை இருள்வித்தார். |
சிலர்,தம்தாரமும், உறு கிளையும் தமை எதிர் தழுவும் தொறும் - சிலஅரக்கர்கள் தமது மனைவிகளும் நெருங்கிய உறவினர்களும் தம்மைக் (கண்ட மகிழ்ச்சியால்) எதிர் வந்து தழுவிக் கொண்ட போதெல்லாம்; நுமதமர் அல்லோம் - யாங்கள் உமது சுற்றத்தினர் அல்லோம்; வானவர் வந்தோம் -நாங்கள் தேவர்கள், இப்போரைக் காண இங்கே வந்தோம்; என்று ஏகினர் -என்று சொல்லிவிட்டு அப்பால் சென்றனர்; சிலர், மானுயர் என வாய் விட்டார் - வேறு சிலர், நாங்கள் மானிடர் (அரக்கர் அல்லர்) என்று பெருங்கூக்குரலிட்டனர்; சிலர் - வேறு சிலர்; மந்தாரம் கிளர் பொழில் வாய்வண்டுகள் ஆனார் - மந்தார மரங்கள் விளங்கும் அந்தச் சோலையினிடத்துவண்டுகளின் வடிவினை எடுத்துக் கொண்டார்; சிலர் மருள் கொண்டார் -இன்னும் சிலர், செய்வது இன்னதென்று அறியாமல் மயங்கி நின்றனர்; சிலர்இந்து ஆர் |