அரக்கிமாண்டாள் - அங்கார தாரைஇறந்தாள்; (அனுமன்) அவள்வாய் - அவளுடைய வாயை; வயிறு காறும் கீண்டான் - வயிறுவரை இரண்டாகப் பிளந்தான்; இமைப்பினிடை - கண் இமைப்பதற்கு முன்பு; மேருகிரி கீழா நீண்டான் - மகா மேருமலை தன்கீழே இருக்கும்படி பேருருக்கொண்டான்; நினைப்பின் நெடிது என்ன- எண்ணத்தை விட வேகம் என்றுகூறும்படி; வயக்கதி பூண்டான் - வேகமாகப் பறத்தலை மேற்கொண்டான்;அருக்கன் உயர்வானின் வழி போனான் - சூரியன் இயங்கும் உயர்ந்தவான வழியே சென்றான். (86) இராமநாமம்இடையூறு நீக்கும் 4827. | ‘சொற்றார்கள் சொற்ற தொகையல்ல துணை ஒன்றோ முற்றா முடிந்தநெடுவானினிடை முந்நீ ரில்தாவி எற்றுஎனினும் யான்இனி இலங்கை உற்றால்,விலங்கும் இடையூறு’ என, உணர்ந்தான். |
சொற்றார்கள் -வழியைக்கூறியவர்கள்; சொற்ற - கூறிய துன்பங்கள்; தொகை அல்ல - எண்ணுக்கு உட்பட்டவை அல்ல; துணை ஒன்றோ - அத்துன்பங்களை நீக்கும் துணை ஒன்றா (பல); நெடுவானின் இடை - பெரிய ஆகாயத்தில் (அவைகள்); முற்றாமுடிந்த - அடியோடும் ஒழிந்துபோயின; முந்நீரில் தாவி - கடலில் தாவிப்போய்; எற்று எனினும் - எத்தகைய இடையூறு வந்தாலும்; யான்இனி - நான் இப்போது; இலங்கை உற்றால் - இலங்கையை அடைந்தால்; இடையூறு விலங்கும் - இடையூறு விலகிப் போகும்; என உணர்ந்தான் - (என்று அனுமான்) அறிந்தான். வழி கூறியவானரர்கள் குறித்த துன்பங்கள் மிகப்பல. அவற்றை நீக்கும் துணைகளும் பல. அத்துன்பங்கள் யாவும் ஒழிந்தன. யான் இலங்கை அடைந்தால் துன்பம் முற்றும் நீங்கும் என்று அனுமன் கருதினான். (87) 4828. | ஊறுகடிதுஊறுவன ஊறில் அறம் உன்னா தேறல்இல்அரக்கர்புரி தீமை அவைதீர ஏறும்வகை எங்குளது? ‘இராம’என எல்லாம் மாறும் அதின்மாறுபிறிதுஇல்’ என வலித்தான். |
|