பத்தியில்தேர்கள் செல்ல - வரிசையாக தேர்கள்செல்லவும்; பவளக்கால் குடைகள் சுற்ற - பவளத்தால் ஆகிய கால்களை உடைய குடைகள்சூழ வரவும்; முத்தினின் சிவிகை தன்னை - முத்தாற் செய்யப் பெற்றபல்லக்குகளை; முகில் எனத் தேர்கள் சுற்ற - மேகம் போலக் கரிய மரத்தால் செய்யப்பெற்ற தேர்கள் சுற்றி வரவும்; மத்த வெங் கரிகள் எல்லாம் - மதம் உடைய கொடிய யானைகள் எல்லாம்; மழை என இருண்டு தோன்ற - மழை மேகம் போலக் கரிதாய்க் காட்சி அளிக்கவும்; தத்திய பரிகள் தன்னின் - தவழ்ந்து துள்ளும் குதிரைகளைப் போல; சாமரை பதைப்ப - வெண் கவரிகள் துடிக்க வந்தான். (13) 5730. | சங்குகள்முழங்க, பேரி சகடைகள் இடியின் வீழ, வெங் குரல்திமிலையோடு கடுவையின் மரங்கள் வீங்க, தொங்கலின்குழாமும் தூளி வெள்ளமும் விசும்பைத் தூர்க்க, திங்களின்குடைகள் பூப்ப, திசைக் களிறு இரிய,- வந்தான்.* |
சங்குகள் முழங்க- சங்குகள் ஒலிக்கவும், பேரி சகடைகள் இடியின் வீழ - பெருமுரசு, டமாரம் ஆகிய வாத்தியங்கள் இடிபோல முழக்கமிடவும்; வெங்குரல் திமிலையோடு கடுவையின் மரங்கள் வீங்க - கொடிய ஒலியை உடைய திமிலை, கடுவை என்னும் வாத்திய ஒலிகளால் மரங்கள் அதிரவும்; தொங்கலின் குழாமும் - மாலைக் கூட்டமும்; தூளி வெள்ளமும் - புழுதித்திரளும்; விசும்பைத் தூர்க்க - ஆகாயத்தை இல்லாதபடி அடைக்கவும்;திங்களின் குடைகள் பூப்ப - சந்திரனைப் போல இடை இடையே குடைகள்பொலிவுறத் தோன்றவும்; திசைக் களிறு இரிய - திக்கு யானைகள் நடுங்கவும்;வந்தான் -வந்தான். (14) 5731. | தீயினில்செவ்வே வைத்து, சின்னங்கள் வேறு வேறு வாயினில் ஊதுவீரர் வழியிடம் பெறாது செல்ல, தாயவள் சொல்மாறாது தவம் புரிந்து அறத்தின் நின்ற நாயகன் தூதன்தானும், நோக்கினன்;நகையும் கொண்டான்.* |
|