| 5734. | தீ எழுபொன்னின் சின்னம் மேவி வீழ் அரக்கர் சேர வாய்களில் ஊத,மண்ணும் வானமும் மறுகிச் சோர்ந்த; ‘ஆயது முடிவுகாலம்; கிளர்ந்தனர் அரக்கர்’ என்று வாய்களின் பேசிவானோர் மண்டினர், மலைதல் நோக்கி.* |
வீழ் அரக்கர் -போரைவிரும்பிய அரக்கர்கள்; தீ எழு பொன்னின் சின்னம் - நெருப்பிலிருந்து காய்ச்சி எழுப்பிய பொன்னால் ஆகிய ஊது கொம்புகளை; மேவி - விரும்பி; சேர வாய்களில் ஊத - ஒன்றாகப் பலரும் வாய்களில் வைத்து ஊத (அவ் ஒலி கேட்டு); மண்ணும் வானமும் மறுகிச் சோர்ந்த - மண்ணுலக மக்களும், விண்ணுலகத்தவரும் கலக்கமுற்றுச் சோர்ந்தனர்; வானோர் - தேவர்கள்; அரக்கர் கிளர்ந்தனர் - அரக்கர் கிளர்ச்சி பெற்றுவிட்டார்கள்; முடிவுகாலம் ஆயது - உலக அழிவுக்காலம் நெருங்கியது; என்று வாய்களின் பேசி - என்று தம் வாய்களினால் பேசிக்கொண்டு; மலைதல் நோக்கி மண்டினர் - போரிடுதலைப் பார்க்க விரும்பி நெருங்கினார்கள். தீ எழு பொன் -‘சுடச் சுடரும் பொன்’ என்பதை (குறள் 267) நினைப்பூட்டும். பேசி என்றாலே அமையவும் ‘வாய்களின்’ என்றது அரக்கரால் துன்புறும் தேவர் அரக்கர்களைப் பற்றியே எப்போதும் பேசும் வாயை உடையவர் என்று அவ்வாயின் இழிவினைச் சிறப்பித்ததாம். (18) | 5735. | அரம்தெறும் அயிலின் காடும், அழல் உமிழ் குந்தக் காடும், சரம் தருசிலையின் காடும், தானவர் கடலும், இன்ன நிரந்தரம் சங்குதாரை நில மகள் முதுகை ஆற்றாள்; ‘புரந்தரசித்துவந்தான்’ என்றன, பொன்னின் சின்னம்.* |
அரம் தெறும்அயிலின் காடும் - அரத்தால் தீட்டிக்கூர்மை செய்யப்பெற்ற வேற்படைத் தொகுதியும்; அழல் உமிழ் குந்தக்காடும் - நெருப்பைக் கக்குகின்ற குந்தப் (ஈட்டி) படையின் மிகுதியும்; கரம் தரு சிலையின் காடும் - அம்புகளை எய்கின்ற |