என்பதால் ‘மாருதிவாழ்ந்தான்’ என்றார் போலும். ஒன்றோ - வியப்புச்சொல். (22) | 5739. | பாறு எழுவாட் படை பத்திரு வெள்ளம்; ஆறு இரு கோடியின்வேலின் அமைந்தார்; கூறிடு வெள்ளம்மிடைந்தது குந்தம்;- வீறுடைமாருதிமேல் வரு சேனை.* |
வீறு உடை மாருதிமேல் வரு சேனை - வீர பராக்கிரமம்உடைய அனுமன் மேல் வருகின்ற சேனையின் அளவு; பாறு எழு வாட்படை பத்து இரு வெள்ளம் - போரிட எழுந்த வாள் படைகள் இருபது வெள்ளமாம்; வேலின் அமைந்தார் - வேலாற் போர் செய்யும் படைஞர்; ஆறிரு கோடி -பன்னிரண்டு கோடியர் ஆகும்; குந்தம் மிடைந்தது - குந்தப் படையால் போரிடுபவர்; கூறிடு வெள்ளம் - சொல்லப்படும் வெள்ளம் என்னும் அளவினை உடையவராவர். ‘வெள்ளம்’ என்பது தமிழில் பேரெண்ணைக் குறிக்கும் சொல். (23) | 5740. | பந்து எனஆடிய பாய் பரி எல்லாம்; சிந்தையின்முந்தின தேர்கள் செறிந்த; அந்தியின்மேனிய ஆனைகள் எல்லாம் வந்தன, மண்ணைஅடித் துகள் மாய்ப்ப.* |
பந்து என ஆடியபாய் பரி எல்லாம் - பந்து போலத் துள்ளிக் குதித்தாடும் பாய்கின்ற குதிரைகளும்; செறிந்த சிந்தையின் முந்தின தேர்கள்- நெருங்கினவாகிய மனத்தினும் வேகமாகச் செல்லும் தேர்களும்; அந்தியின்மேனிய ஆனைகள் எல்லாம் - மாலைக்காலம் போல இருண்ட கரியமேனியுடைய யானைகளும்; அடித்துகள் மண்ணை மாய்ப்ப வந்தன - தம் பாதத்தூசி நிலவுலகத்தை மறைத்து இல்லாமல் செய்யும்படி வந்தன. (24) | 5741. | சங்கொடுதாரைகள், சச்சரி, சின்னம், எங்கும்இயம்பின; பேரி இடித்த; வெங் குரலின்பறை விண்ணில் நிறைந்த; பொங்கி அரக்கர் பொருக்கென வந்தார்.* |
|