வஞ்சனைப்போர்செய்தல் அரக்கர் இயல்பு; அனுமனுக்கு இயல்பன்று ஆதலின், அனுமனின் வீரப் போர் கண்டு அரக்கர்க்கு மாயம் போல் உள்ளது என்று நினைக்குமாறு செய்யும் திறல் என உரைக்கப் பெற்றது. அனுமனின் இராம பக்தி இங்கே தோன்றுகிறது. தன் ஆற்றலினும் இராமபத்தியே தனக்கு வெற்றி தருவது என்பதை உணர்ந்தவன் அனுமன். (29) | 5746. | ஆழியின்ஆய அரக்கர் பெரும் படை ஏழ் உலகும் இடம்இல் என ஈண்டிச் சூழும் எழுந்தனர்தோன்றினர்தம்மைக் கோழியின் ஒக்குவ கூவிடுகின்றான்.* |
(அனுமன்) ஏழ் உலகும்இடம்இல் என - ஏழ் உலகங்களும் இனிஇவர் இயங்கற்கு இடம் இல்லை என்று சொல்லும்படி; ஆழியின் ஆய அரக்கர் பெரும்படை - கடல்போலப் பெருகிய அரக்கர் சேனையாக; ஈண்டிச் சூழும் எழுந்தனர் தோன்றினர் தம்மை - நெருங்கிச் சூழ்ந்து புறப்பட்டுத் தோன்றியவர்களை; கோழியின் ஒக்குவ - கோழி கூப்பிடுவது போல; கூவிடுகின்றான் - அழைக்கின்றான். அனுமன் அரக்கர்சேனையைப் போருக்கு அழைப்பது கோழி கூவுதல் போல் உள்ளது என்பதாம். (30) | 5747. | மாருதி கூவமகிழ்ந்தனன் ஆகி, கூரிய புந்தியின்கோவன் குறிக்கொடு, கார் அன மேனிஅரக்கர்கள் காணா, வாரிகளூடு மடுத்தனவாளி.* |
மகிழ்ந்தனன்ஆகி மாருதி கூவ - மகிழ்ச்சி அடைந்துஅனுமன் அழைக்க; கூரிய புந்தியின் கோவன் குறிக்கொடு - நுண்ணுணர்வின் தலைவனாய அனுமனது குறிப்பைக் கொண்டு; கார்என மேனி அரக்கர்கள் காணா - கருமை நிறம் பெற்ற உடம்புடைய அரக்கர்கள் கண்டு (விட்ட); வாளி - அம்புகள்; வாரிகள் ஊடு மடுத்தன - கடலின் கண் போய் விழுந்தன. சீறி எழுந்தஅரக்கர்தம் அம்புகள் கணக்கிலவாதலின் கடலில் வீழ்ந்தன. கோவன் - அரசன் நுண்ணறிவில் திறன் வாய்ந்தவன் என்பது |