பக்கம் எண் :

பாசப் படலம்673

அனுமனைக் குறித்தது.‘நன்குணர் மாருதி’ (கம்ப. 4402) என்றதும் நோக்குக.
                                                      (31)

5748.

தூளி மிடைந்து, உருத் தோன்றல் ஆகி,
யாளி அனானைஅறிந்திலன் ஆகி,
சூழுறநோக்கினன், சோதனை பெற்றான்;
கோள் அமைந்துஅன்னவை கூறுதலுற்றான்.*

     தூளி மிடைந்து -புழுதிமேலே நெருங்கி; உரு தோன்றல ஆகி -
வடிவு பார்க்க முடியாமல்; யாளி அன்னானை - சிங்கம் போன்ற இந்திர
சித்துவை; அறிந்திலன் ஆகி - கண்டறியாதவனாகி; சோதனை பெற்றான் -
சோதித்து அறிதல் பெற்றானாய்ச்; சூழ் உற நோக்கினன் - சுற்றிலும்
நன்றாகப் பார்த்தான்; கோள் அமைந்து - தன் எண்ணம் நிரம்பப் பெற்று;
அன்னவை -
அத்தன்மைகளை; கூறுதல் உற்றான் - சொல்லத்
தொடங்கினான்.

     படைப்பெருக்கத்தால் தூசி மிகுந்தது. இந்திரசித்துவை மறைத்தது.
அதனால் அனுமன் காணாதவனாய்ச் சோதனையால் அறிந்தான் என்பதாகும்.
                                                     (32)

5749.

இந்திரன்முன்பும் இடும் திரள் சோதிச்
சந்திர வெண்குடை தான் எதிர் கண்டான்;
அந்தம் இல்கேள்வியன் ஆனைகள் காணா,
சிந்தை உவந்து,சிரித்து உடன் நின்றான்.*

     அந்தம் இல்கேள்வியன்  - முடிவற்ற கேள்விஞானத்தில் நிரம்பப்
பெற்றவன் ஆகிய அனுமன்; ஆனைகள் காணா - இந்திர சித்துவைக்
காத்துச் சுற்றிலும் நிற்கும் ஆனைத்திரளைக் கண்டு; இந்திரன் முன்பும் இடும்
திரள் சோதிச் சந்திர வெண்குடை தான் எதிர்கண்டான்  -
இந்திரனுக்கு
முன்னால் இடப்படும் சந்திரமயமான வெண்குடையையும் எதிர்கண்டு; சிந்தை
உவந்து -
இந்திரசித்து இங்கேதான் உள்ளான் என்று மனம் மகிழ்ந்து; சிரித்
துஉடன் நின்றான் -
சிரித்து கூட நின்றான்.

     இந்திரன் முன்புஇடும் சந்திர வெண்குடை அவனை வென்றமையால்
இந்திரசித்துவுக்கு உரியதாயிற்று. சுற்றிலும் கரிய ஆனைத் திரளின் இடையில்
சந்திர வெண்குடை கண்டு இந்திர சித்துவைக் கண்டு கொண்டான் அனுமன்
என்க.                                                  (33)