பக்கம் எண் :

674சுந்தர காண்டம்

5750.

சிந்தை உவந்தவன் ஆகி அரக்கன்
முந்தி எழுந்துமுனிந்தமை நோக்கி,
‘வெந் திறலாய்! விரைவின் வருக !’ என்றான்;
‘இந்திரசித்துஇவன்’ என்பது இசைத்தான்.*

     சிந்தைஉவந்தவன் ஆகி - (அனுமன்) மனமகிழ்ச்சிஅடைந்து;
அரக்கன் முந்தி எழுந்து முனிந்தமை நோக்கி -
இந்திர சித்து முற்படச்
சீறிப் புறப்பட்டதைப் பார்த்து; ‘வெந்திறலாய்- கொடிய வலிமை உடைய
இந்திரசித்தே !; விரைவின் வருக’ - சடுதியில் போர்க்கு வருக; என்றான் -
என்று அழைத்தான்; இவன் இந்திரசித்து என்பது இசைத்தான் - இவன்
இந்திரசித்து என்பதனை (ஒருவன்) எடுத்துக் கூறினான்.

     முன்பாட்டுடன்இப்பாட்டு அந்தாதித் தொடைபோல் அமைந்தது காண்க. 
                                                          (34)

5751.

என்று அவன்மாற்றம் இயம்புதல் கேட்டு,
குன்றம் எனும் புயவானர வீரன்,
‘நன்று இது !நன்று இது ! என்ன நயந்தான்;
சென்று அணைவுற்றதுஅரக்கன சேனை;*

     என்று அவன்மாற்றம் இயம்புதல் கேட்டு - ஒருவன் ‘இவன்
இந்திரசித்து’ என்று சொல்லியதைக் கேட்டு; குன்றம் எனும் புய வானர
வீரன் -
மலை போன்ற தோள் உடைய அனுமன்; ‘நன்று இது ! நன்று இது
! என்ன நயந்தான் -
நல்லது நல்லது என்றுரைத்துப்போரை விரும்பினான்
(இந்நிலையில்); அரக்கனசேனை - இந்திர சித்துவின் சேனை; சென்று
அணைவுற்றது -
(அனுமன்இருந்த தோரண வாயிலைச்) சென்று சேர்ந்தது.
அவன் என்பது‘இவன் இந்திர சித்து’ என்று கூறிய அரக்கனைச்
சுட்டியதாகக் கொள்ளப் பொருள் நேரிதாகும்.                    (35)

5752.

ஊழி எழுந்துஉலகத்தை ஒடுக்க,
ஆழ் இயல் தானைஅரக்கர் அடங்க,
ஏழ் உலகும் இடம்இல்லை எனும்படி
ஆழி கிளர்ந்தனஎன்ன அழைத்தான்.*

     ஆழ் இயல் தானைஅரக்கர் அடங்க - ஆழும் இயல்பினை உடைய
சேனையாகிய அரக்கர் முழுவதும்; ஏழ் உலகும் இடம்