பக்கம் எண் :

678சுந்தர காண்டம்

அனுமனைக் குறித்து;அமரின் ஆற்றல் - (இவனது) போர் வல்லமை; நன்று
என -
நன்றாயுள்ளது என்று பாராட்டி; உவகை கொண்டான் - மகிழ்ச்சி
கொண்டான்; யாவரும் நடுக்கம் உற்றார் - அது கண்டோர் அனைவரும்
(என்ன விளையுமோ) என்று அச்சம் அடைந்தார்கள்.                                   

     வீரச் செயலின்அருமை பெருமைகளை அறிந்து பாராட்டுவது உயர்ந்த
வீரர்க்கு இயல்பு. மேகநாதன் வீரத்தே நின்ற வீரன் ஆதலால், அனுமனைப்
பாராட்டி, அமரின் ஆற்றல் நன்று என உவகை கொண்டான் என்க. என்ப;
மன்; ஓ - அசை நிலைகள்.                                 (40)

போர்க்களத்தைநோக்கிய இந்திரசித்தின் மனநிலை

5757.

இலை குலாம்பூணினானும், ‘இரும் பிணக் குருதி
                                   ஈர்த்து,
அலகு இல் வெம்படைகள் தெற்றி, அளவிடற்கு
                               அரிய ஆகி,
மலைகளும்,கடலும், யாறும், கானமும் பெற்று,
                               மற்று ஓர்
உலகமே ஒத்தது,அம்மா ! போர்ப் பெருங் களம்’
                               என்று உன்னா,

     இலைகுலாம்பூணினானும் - இலை வடிவமாகச் செய்தஅணிகளை
அணிந்த இந்திர சித்தும்; பெரும் போர்க்களம் - அந்தப் பெரும்
போர்க்களமானது; இரும்பிணம் - போரில் இறந்த அரக்கர்களது பெரும்
பிணங்களின்; குருதி ஈர்த்து - இரத்த வெள்ளத்தில்; அலகு இல்
வெம்படைகள் -
அளவில்லாத கொடிய ஆயுதங்கள்; தெற்றி - அலைக்கப்
பெறுதலால்; அளவு இடற்கு அரியஆகி - அளவிட்டுக் கூற முடியாதனவாகி;
மலைகளும் கடலும் -
மலைகளையும், கடல்களையும்; யாறும் கானமும் -
ஆறுகளையும், காடுகளையும்; பெற்று - தன்னிடம் அமையப் பெற்று; மற்றும்
ஓர் உலகமே -
வேறு ஓர் உலகமே போல; ஒத்தது என்று உன்னா - பரந்
துகிடந்தது என்று கருதி.

     அம்மா, வியப்பைஉணர்த்தும் இடைச்சொல். ‘விம்மல் கொண்டான்’
என்று அடுத்த கவியின் தொடரோடு முடியும். பிணங்கள் மலைகளாகவும்,
இரத்தம் கடலாகவும் ஆறாகவும், ஆயுதங்கள் காடாகவும் தோற்றம் அளித்தன.
அதுகண்டு மற்றும் ஓர் உலகமே என்று வியந்தான் மேகநாதன் என்க.    (41)