தாம் தாம்கைதேர்ந்துள்ள ஆயுதங்களைக் கொண்டு, தம்மவர்களைக் காப்பவரும்; எண்ணல்ஆம் - நினைத்தற்கும் இயலாத; தகைமை இல்லார் - பெருமையுடையவருமாகி; இறந்து - அனுமனால் உயிர்நீத்து; இடை கிடந்தார் தம்மை - அவ்விடத்திலே விழுந்து கிடந்த அரக்க வீரர்களை; மண்ணுளே நோக்கி நின்று - போர்க்களத்திலே பார்த்து நின்று; வாய் மடித்து உருத்து - உதட்டை மடித்துக் கடித்துக் கொண்டு கோபித்து; மாயாபுண்ணுளே கோல் இட்டு அன்ன - ஆறாத புண்ணிலே கோலைக் கொண்டு குத்தினாற் போல; மானத்தால் புழுங்குகின்றான் - அவமானத்தால் (இந்திரசித்து) (உடலும் உள்ளமும்) கொதிக்கின்றவனானான். பல சிறப்பிற்குஉரிய வீரர்கள் போர்க்களத்தில் இறந்து கிடந்ததைப் பார்த்தபோது, இந்திரசித்தன் மனம் மிகவும் வருந்தியது. அவ்வருத்தம் புண்ணில் கோல் நுழைந்தால் போன்று ஆயிற்று என்பதாம். (43) | 5760. | ‘கானிடைஅத்தைக்கு உற்ற குற்றமும், கரனார் பாடும், யானுடை எம்பிவீந்த இடுக்கணும், பிறவும் எல்லாம், மானிடர்இருவராலும், வானரம் ஒன்றினாலும், ஆனிடத்து உள;என் வீரம் அழகிற்றே அம்ம !’ என்றான். |
கானிடைஅத்தைக்கு உற்ற குற்றமும் - தண்டக வனத்திடத்துஎன் அத்தையாகிய சூர்ப்பணகைக்கு நேர்ந்த மூக்கு முதலியன அறுப்புண்ட குறைபாடும்; கரனார் பாடும் - கரன் இறந்ததும்; யானுடை எம்பி வீந்த இடுக்கணும் - என்னுடைய தம்பி அக்க குமாரன் அழிந்த துன்பமும்; பிறவும் எல்லாம் - மற்றைய (அசோகவனம் அழிந்தமை முதலியனவுமான) யாவும்; மானிடர் இருவராலும் - இரண்டு மனிதர்களாலும்; வானாம் ஒன்றினாலும் - ஒரு குரங்கினாலும்; ஆனிடத்து - உண்டாயின என்றால்; என் உளவீரம் - என்னிடத்து உள்ள வீரம்; அழகிற்றே - அழகுடையதே !; அம்ம ! என் றான்- என்ன ஆச்சரியம் என்று (இந்திரசித்து) கூறினான். ‘இவ்வளவு துன்பமும், இருமானிடர்களாலும், ஒரு குரங்கினாலும் நேர்ந்தது என்றால், என் வீரம் அழகிற்றே’ என்று இகழ்ச்சிக் குறிப்புடன் பேசினான் இந்திரசித்து. |