தாருகன் குருதிஅன்ன குருதியில் - தாருகாசுரனுடைய இரத்தப் பெருக்குப் போன்ற இரத்தப் பெருக்கில்; தனிமாசீயம் கூர் உகிர் கிளைத்த -ஒப்பற்ற நரசிங்கமூர்த்தி, தனது கூரிய நகங்களால் கிளறிப் பிளந்த; கொற்றகனகன் மெய்குழம்பின் தோன்ற - வெற்றியை உடைய இரணியனது உடல் குழம்பாகக் கலக்கப்பட்டுக் கிடந்ததுபோல் உருத் தெரியாமல் (தன் தம்பியின் உடல்) கிடந்து விளங்க (அதனைக் கண்டு); தேர் உக - தான் ஏறி வந்த தேரும் நிலை குலைய; கையின் வீர சிலை உக - தன் கையில் பிடித்திருந்த வீரத் தன்மையிற் சிறந்த வில்லும் நழுவ; வயிரம் செங்கண் நீர் உக குருதி சிந்த - பகைமையைக் காட்டும் தனது சிவந்த கண்கள் நீரையும் இரத்தத்தையும் சிந்த; நெருப்பு உக உயிர்த்து நின்றான் - நெருப்பையும் கக்க (இந்திரசித்து) பெருமூச்சு விட்டுக் கொண்டு நின்றான். அக்க குமாரன்உடல் விழுந்து கிடந்த இடத்தின் இரத்தப் பெருக்குக்கு, தாருகன் இரத்தமும், அது உருத்தெரியாமல் சிதைந்து கிடந்ததற்கு, இரணியன் உடலும் உவமைகள். அவ்வுடலைக் கண்ட இந்திரசித்து உயிர்த்து நின்றான் என்பதாம். தாருகன்: ஓர்அசுரன்: காளிதேவியால் அழிக்கப்பட்டவன்; ‘தாருகன் பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள்’ (சிலப். 20: 39-40) (46) | 5763. | ‘வெவ் இலைஅயில் வேல் உந்தை வெம்மையைக் கருதி நோக்கி, வவ்வுதல் கூற்றும்ஆற்றான்; மாறு மாறு உலகின் வாழ்வார், அவ் உலகத்துஉளாரும், அஞ்சுவர் ஒளிக்க; ஐயா ! எவ் உலகத்தைஉற்றாய், எம்மை நீத்து, எளிதின் ? எந்தாய் !’ |
எந்தாய் -எனது ஐயனே!; வெவ்இலை அயில் வேல் உந்தை - கொடியதும் இலை போன்ற முனையுடையதும் கூர்மை உடையதும் ஆன வேலாயுதத்தை ஏந்திய உனது தந்தையின் (இராவணனது); வெம்மையை கருதி நோக்கி - கோபத்தை ஆலோசித்துப் பார்த்து; கூற்றும் வவ்வுதல் ஆற் றான்- யமனும் (உனது உயிரைக்) கவரவல்லனல்லன்; மாறுமாறு உலகின்வாழ்வார் - மற்றும் வெவ்வேறு உலகங்களில் வாழ்பவரான; அவ் உலகத்துஉளாரும் ஒளிக்க அஞ்சுவர் - அந்தந்த உலகத்தில் உள்ளவர்களும் |