இந்திரசித்தைநோக்கிய அனுமன் சிந்தனை கலிவிருத்தம் | 5765. | ஈண்டு இவைநிகழ்வுழி, இரவி தேர் எனத் தூண்டுறுதேரின்மேல் தோன்றும் தோன்றலை, மூண்டு முப்புரம்சுட முடுகும் ஈசனின், ஆண் தகை வனைகழல் அனுமன், நோக்கினான். |
ஈண்டு இவைநிகழ்வுழி - இவ்விடத்தில் இச்செயல்கள் நடக்கும்போது; இரவி தேர் என - சூரியனும் அவனுடைய தேரும் போல; தூண்டு உறும் தேரின் மேல் தோன்றும் தோன்றலை மூண்டு - செலுத்தப்பட்ட தேரின் மீது விளங்கும் இராவணன் புதல்வனான இந்திரசித்தை சீற்றம் மேற்கொண்டு; முப்புரம் சுட முடுகும் ஈசனின் - திரிபுரங்களை எரித்தற்கு விரைந்து செல்லும் சிவபெருமானைப் போன்ற; ஆண்தகை வனைகழல் அனுமன் நோக்கினான் - ஆண்மைக் குணம் மிக்க பூண்ட வீரக்கழலை உடைய அனுமன் பார்த்தான். இரவி, தேர்உம்மைத்தொகை. அனுமனுக்குச் சிவபிரான் உவமை. அவன் சிவபிரான் அம்சமாக அவதரித்தவன் என்பதைக் குறிக்க வந்தது. (49) கலிநிலைத் துறை | 5766. | ‘வென்றேன், இதன் முன், சில வீரரை என்னும் மெய்ம்மை அன்றே முடுகிக்கடிது எய்த அழைத்தது அம்மா ! ஒன்றே, இனிவெல்லுதல் தோற்றல்; அடுப்பது உள்ளது இன்றே சமையும்;இவன் இந்திரசித்து !’ என்பான். |
இதன்முன் சிலவீரரை வென்றேன் என்னும் மெய்ம்மை அன்றே - யான்,இதற்கு முன் சில அரக்க வீரரை போரில் வென்றேன் என்னும் உண்மை அல்லவா; முடுகி கடிது எய்த அழைத்தது அம்மா - மிக்க விரைவாக வருமாறு (இவனை) இங்குக் கூப்பிட்டது; இனி வெல்லுதல் தோற்றல் ஒன்றே அடுப்பது உள்ளது - யான், இனி வெற்றி பெறுவது அல்லது தோற்பது என்பவற்றுள் |