| | இன்றே, கடிகெட்டது, அரக்கர் இலங்கை; யானே வென்றேன், அவ்இராவணன்தன்னையும், வேரொடு’ என்றான். |
ஒண்மையானை -ஒளியுற்றஇந்த இந்திரசித்தை; கொன்றேன் எனின் - நான் கொன்றேன் என்றால்; இதனால் வரும் ஊதியம் ஒன்றோ - இந்தச் செயலால் விளையக்கூடிய நன்மை ஒன்று தானோ !; இந்திரனும் துயர் கோளும் நீங்கும் அரக்கர் இலங்கை இன்றே கடி கெட்டது - இந்திரனும் துயர் கொண்டிருத்தலை நீங்கும் அரக்கர்களுடைய இலங்கை நகரம் இன்றே காவல் ஒழிந்ததாம்; அவ் இராவணன் தன்னையும் வேரொடு யானே வென்றேன் - அந்த இராவணனையும் வேரோடு நானேவென்றவனாவேன்; என்றான் - என்று (அனுமன்) எண்ணினான். இந்திரசித்தின்அழிவினால் ஏற்படும் நன்மைகளை அனுமன் எண்ணினான் என்பதாம். ஒண்மை - ஒளி; ஒளி - தான் உளனாய காலத்து மிக்குத் தோன்றுதலுடைமை. (52) அரக்கர் படையுடன்அனுமன் பொருதல் | 5769. | அக் காலை,அரக்கரும், யானையும், தேரும், மாவும், முக் கால் உலகம்ஒரு மூன்றையும் வென்று முற்றிப் புக்கானின் முன்புக்கு, உயர் பூசல் பெருக்கும் வேலை, மிக்கானும்,வெகுண்டு ஓர் மராமரம் கொண்டு மிக்கான். |
அக்காலை -இவ்வாறுஅனுமான் எண்ணிக் கொண்டு நின்றபொழுது; உலகம் ஒரு மூன்றையும் முக்கால் வென்று - மூன்று உலகங்களையும் (ஒருமுறைக்கு) மூன்று முறையாக வென்று; முற்றி புக்கானின் முன்புக்கு - எதிரில்லாமல் முடித்து இலங்கையில் வெற்றி வீரனாய்ப் புகுந்த இந்திரசித்துக்கு முன்னே வந்து; அரக்கரும், யானையும் தேரும், மாவும் - அரக்கர்களாகிய காலாட்படையும், யானை, தேர், குதிரை ஆகிய படைகளும்; உயர் பூசல் பெருக்கும் வேலை - மிக்க ஆரவாரத்தைப் பெரிதும் உண்டாக்கிய வேளையில்; மிக்கானும் - பெரியோனான அனுமனும்; வெகுண்டு ஓர் மராமரம் கொண்டு - சினம் கொண்டு, |