பக்கம் எண் :

பாசப் படலம்687

ஒரு ஆச்சாமரத்தைப்பிடுங்கி எடுத்துக் கொண்டு; மிக்கான் - (போர் செய்ய)
பேருருக் கொண்டவனானான்.

     இந்திரசித்துபோர்க்களம் புகுதற்கு முன்பு, நால்வகைப் படைகளும்
வந்து ஆரவாரம் செய்தன. அதனைக் கண்டு அனுமனும் வெகுண்டு
போருக்குத் தயாரானான் என்க.                             (53)

5770.

உதையுண்டனயானை; உருண்டன யானை;
                             ஒன்றோ ?
மிதியுண்டனயானை; விழுந்தன யானை; மேல் மேல்,
புதையுண்டன யானை;புரண்டன யானை; போரால்
வதையுண்டன யானை;மறிந்தன யானை, மண்மேல்.

     யானை உதை உண்டன- (அரக்கர் சேனையில்) சில யானைகள்
அனுமனால் உதைக்கப் பெற்றன; யானை உருண்டன - சில யானைகள்
உருளப் பெற்றன; ஒன்றோ யானை மிதி உண்டன - இது மாத்திரமோ ?
சிலயானைகள் அனுமனால் மிதிக்கப்பட்டுப் போயின; யானை விழுந்தன -
சிலயானைகள் கீழே விழுந்தன; யானை மேல் மேல் புதை உண்டன - சில
யானைகள் ஒன்றன் மேல் ஒன்றாகப் புதைந்து போயின; யானை புரண்டன -
சில யானைகள் முன் பின்னாகவும் கீழ் மேலாகவும் நிலை மாறின; யானை
போரால் வதையுண்டன -
சில யானைகள் போரில் வதைக்கப்பட்டன;
யானை மண்மேல் மறிந்தன - மற்றும் சில யானைகள் அந்தப்
போர்க்களத்தில் மல்லாந்து வீழ்ந்தன.

     அனுமனால்யானைப்படை அழிந்தமை கூறப்பட்டது.          (54)

5771.

முடிந்ததேர்க் குலம்; முறிந்தன தேர்க் குலம்; முரண்
                           இற்று
இடிந்த தேர்க்குலம்; இற்றன தேர்க் குலம்; அச்சு
                           இற்று
ஒடிந்த தேர்க்குலம்; உக்கன தேர்க் குலம்; நெக்குப்
படிந்த தேர்க்குலம்; பறிந்தன தேர்க் குலம், படியில்.

     தேர்க்குலம்முடிந்த - சில தேர்க்கூட்டங்கள் முழுவதும் அழிந்தன;
தேர்க்குலம் முறிந்தன - சில தேர்க் கூட்டங்கள் சிற்சில பகுதிகள்
முறி்பட்டன; தேர்க்குலம் முரண் இற்று இடிந்த - சில தேர்க்கூட்டங்கள்
வலிமை அழிந்து இடிபட்டன; தேர்க்குலம் இற்றன - சில தேர்க்கூட்டங்கள்
மூட்டுக்கள் அற்று விழுந்தன;