தேர்க்குலம் அச்சுஇற்று ஒடிந்த - சில தேர்க்கூட்டங்கள்அச்சு முறிந்து ஒடியப் பெற்றன; தேர்க்குலம் உக்கன - சில தேர்க் கூட்டங்கள் பொடியாய் உதிர்ந்தன; தேர்க்குலம் நெக்கு படிந்த - சில தேர்க்கூட்டங்கள் சிதைந்து கீழே விழுந்தன; தேர்க்குலம் படியில் பறிந்தன - சில தேர்க்கூட்டங்கள் தரையில் சாய்ந்தன. இந்திரசித்தின்தேர்ப்படைகள் பலவாறு அழிந்தமை கூறப்பட்டது. (55) | 5772. | சிரன்நெரிந்தவும், கண் மணி சிதைந்தவும், செறி தாள் தரன்நெரிந்தவும், முதுகு இறச் சாய்ந்தவும், தார் பூண் உரன்நெரிந்தவும், உதிரங்கள் உமிழ்ந்தவும், ஒளிர் பொற் குரன்நெரிந்தவும், கொடுங் கழுத்து ஒடிந்தவும்- குதிரை. |
குதிரை சிரம்நெரிந்தவும் - (அனுமனால்அழிக்கப்பட்டு) குதிரைகள் தலை நொறுங்கிப் போயவையும்; கண்மணி சிதைந்தவும் - கண்களின் கருவிழிகள் சிதையப் பெற்றவையும்; செறிதாள்தரன் நெரிந்தவும் - வலிமை மிக்க கால்களின் தொகுதி நொறுங்கப் பெற்றவையும்; முதுகு இற சாய்ந்தவும் - முதுகு ஒடியக் கீழே சாய்ந்தவையும்; தார் பூண் உரன் நெரிந்தவும் - கிண்கிணி மாலை அணிந்த மார்பு நொறுங்கப் பெற்றவையும்; உதிரங்கள் உமிழ்ந்தவும் - இரத்தப் பெருக்குகளைக் கக்கியவையும்; ஒளிர் பொன் குரன்நெரிந்தவும் - பிரகாசமான பொற் சதங்கையை அணிந்த கால் குளம்புகள்நொறுங்கப் பெற்றவையும்; கொடும் கழுத்து ஒடிந்தவும் - வளைந்தகழுத்துக்கள் ஒடிந்தவையும் (ஆயின). குதிரைப் படைஅழிந்தமை கூறப்பட்டது. (56) | 5773. | பிடியுண்டார்களும், பிளத்தலுண்டார்களும், பெருந் தோள் ஒடியுண்டார்களும்,தலை உடைந்தார்களும், உருவக் கடியுண்டார்களும்,கழுத்து இழந்தார்களும், கரத்தால் அடியுண்டார்களும்,அச்சமுண்டார்களும்-அரக்கர். |
|