அரக்கர் -காலாட்படையினரான அரக்க வீரர்கள்; பிடிஉண்டார்களும் - அனுமனால் பிடிக்கப்பட்டவர்களும்; பிளத்தல உண்டார்களும் - உடல் பிளக்கப்பட்டவர்களும்; பெரும்தோள் - பெரிய தோள்கள்; ஒடி உண்டார்களும் - ஒடிபட்டவர்களும்; தலை உடைந்தார்களும் - தலைகள் உடையப் பெற்றவர்களும்; உருவ கடி உண்டார்களும் - (உடல் முழுவதும்) நன்றாகக் கடிக்கப் பெற்றவர்களும்; கழுத்து இழந்தார்களும் - கழுத்தை இழந்தவர்களும்; கரத்தால் அடி உண்டார்களும் - கைகளால் அடிக்கப் பெற்றவர்களும்; அச்சம் உண்டார்களும் - பயம் கொண்டவர்களும் (ஆனார்கள்). காலாட்படை அழிவுகூறப்பட்டது. (57) | 5774. | வட்ட வெஞ்சிலை ஓட்டிய வாளியும், வயவர் ‘விட்ட விட்டவெம் படைகளும், வீரன்மேல் வீழ்ந்த, சுட்ட வல் இரும்புஅடைகலைச் சுடுகலாததுபோல், பட்ட பட்டனதிசையொடும் பொறியொடும் பரந்த. |
வயவர் - அரக்க வீரர்கள்;வட்டம் வெம்சிலை - நன்கு வளைக்கப்பட்ட கொடிய விற்களினின்றும் செலுத்திய அம்புகளும்; விட்ட விட்ட வெம்படைகளும் - மற்றும் மிகுதியாகப் பிரயோகித்த கொடிய ஆயுதங்களும்; வீரன்மேல் - மகா வீரனான அனுமன் மேல்; வீழ்ந்த - விழுந்தவைகளாய்; சுட்ட வல் இரும்பு அடைகலை சுடுகலாதது போல் - நெருப்பில் காய்ந்த வலிய இரும்பு, பட்டடைக் கல்லைச் சுடாதது போல; பட்ட பட்டன திசையொடும் பொறியொடும் பரந்த - அனுமன் மேல் பட்டவை அனைத்தும் (ஓர் இடையூறும் செய்யாது) நான்கு திசைகளிலும், நெருப்புப் பொறிகளைச் சிந்தினவாய்ப் பரவி்ச் சென்றன. காய்ச்சினஇரும்பு, அடைகல்லை ஊறுசெய்ய மாட்டாது, தானே பொறிவிட்டுச் சிதைவுறுவதுபோல, அனுமன் மேல் விழுந்த ஆயுதங்கள், அவனை ஊறு செய்யாது சிதைந்தன என்று கூறியவாறு. (58) இந்திரசித்தும்அனுமனும் பலவகையாகப் பொருதல் | 5775. | சிகை எழும்சுடர் வாளிகள், இந்திரசித்து, மிகை எழும்சினத்து அனுமன்மேல் விட்டன, வெந்து, புகை எழுந்தன,எரிந்தன, கரிந்தன போத,- நகை எழுந்தன,அழிந்தன, வான் உளோர் நாட்டம். |
|