பக்கம் எண் :

690சுந்தர காண்டம்

     மிகை எழும்சினத்து அனுமன் மேல் - பொங்கி எழும் கோபத்தை
உடைய அனுமன்மீது; இந்திர சித்து விட்டன - இந்திர சித்து
(தூரத்திலிருந்துதொடுத்து) விட்டவையாகிய; சிகை எழும் சுடர் வாளிகள் -
கொழுந்துவிட்டுஎரியும் அம்புகள்; வெந்து புகை எழுந்தன - வெந்து புகை
கிளம்பப்பெற்றவையும்; எரிந்தன கரிந்தன - எரியப்பட்டொழிந்தவையும்,
தீய்ந்துபோனவையுமாய்; போத - (அவன் உடலைச் சிறிதும்)
ஊறுபடுத்தாதொழிய;நகை எழுந்தன - (அது கண்ட இந்திரசித்துக்குக்
கோபத்தால்) சிரிப்புஉண்டாயின; வான் உளோர் நாட்டம் அழிந்தன -
(இனி என்னாகுமோ என்று அஞ்சி மனம் கலங்கியதனால்) தேவர்களுடைய
கண்களும் கலக்கம்அடைந்தன.

     அனுமனதுசினத்தீச்சுடர், இந்திரசித்து வீசிய அம்புகளைச் சுட்டுப்
பயனற்றவை ஆக்கின என்பது கருத்து.                          (59)

5776..

தேரும், யானையும், புரவியும், அரக்கரும், சிந்திப்
பாரின் வீழ்தலும், தான் ஒரு தனி நின்ற பணைத்
                           தோள்
வீரர் வீரனும்,முறுவலும் வெகுளியும் வீங்க,
‘வாரும், வாரும்’ என்று அழைக்கின்ற அனுமன்மேல்
                           வந்தான்.

     தேரும்,யானையும், புரவியும், அரக்கரும் சிந்தி பாரின் வீழ்தலும்
-
தேர்களும், யானைகளும், குதிரைகளும், அரக்கப் போர் வீரர்களும் சிதறி,
தரையில் அடிபட்டு விழுந்தவுடன்; தான் ஒரு தனி நின்ற - தான் ஒருவன்
மாத்திரமே தன்னந்தனியாய் எஞ்சி நின்ற; பணை தோள் வீரர் வீரனும் -
பருத்த தோள்களை உடைய மகாவீரனாகிய இந்திரசித்தும்; முறுவலும்
வெகுளியும் வீங்க -
புன் சிரிப்பும் கோபமும் அதிகரிக்க; வாரும் வாரும்
என்று அழைக்கின்ற அனுமன் மேல் வந்தான் -
வாருங்கள் வாருங்கள்
என்று மேன்மேலும் உற்சாகத்தோடு கூப்பிடுகின்ற அனுமன்மீது எதிர்த்துப்
போரிட வந்தான்.

     வாரும் வாரும் என்பது இகழ்ச்சிக் குறிப்பு. இகழ்ச்சியுடன் அழைதத்
அனுமனுடன்  போர் செய்ய வந்தான் இந்திரசித்து.                 (60)

5777.புரந்தரன்தலை பொதிர் எறிந்திட, புயல் வானில்
பரந்த பல்உரும்ஏற்றுஇனம் வெறித்து உயிர் பதைப்ப,