பக்கம் எண் :

பாசப் படலம்691

 

நிரந்தரம் புவி முழுவதும் சுமந்த நீடு உரகன்
சிரம் துளங்கிட,அரக்கன் வெஞ் சிலையைநாண்
                                 தெறித்தான்.

     புரந்தரன் தலைபொதிர் எறிந்திட - இந்திரன் தலைநடுக்கம்
மேலிடவும்; வானில் பரந்த புயல் பல் உரும் ஏற்று இனம் - ஆகாயத்தில்
பரந்து விளங்கிய மேகங்களில் உள்ள பல பெரிய இடிகளின் கூட்டம்;
வெறித்து உயிர் பதைப்ப - அச்சத்தால் மயக்கம் கொண்டு உயிர் நடுங்கவும்;
நிரந்தரம் புவி முழுவதும் சுமந்த நீடு உரகன் - எப்போதும் உலகம்
முழுவதையும் தாங்கிக் கொண்டுள்ள நீண்ட பாம்பாகிய ஆதிசேடன்; சிரம்
துளங்கிட -
தன் ஆயிரம் தலைகளும் அச்சத்தால் நடுங்கவும்; அரக்கன்
வெஞ்சிலையை நாண் தெறித்தான் -
அரக்கனாகிய இந்திரசித்து, தன்
வில்லின் கொடிய நாணைக் கை விரலால் தெறித்து ஒலி எழுப்பினான்.

     இந்திரசித்துதனது வில்லின் நாணைத் தெறித்த போது, அச்சத்தால்
நடுங்கிய பிறரது நடுக்கம் கூறப்பட்டது. பொதிர் - நடுக்கம்.          (61)

5778.

ஆண்டநாயகன் தூதனும், அயனுடை அண்டம்
கீ்ண்டதாம் என,கிரி உக, நெடு நிலம் கிழிய,
நீண்ட மாதிரம்வெடிபட, அவன் நெடுஞ் சிலையில்
பூண்ட நாண் இற,தன்  நெடுந் தோள் புடைத்து
                                 ஆர்த்தான்.

     ஆண்ட நாயகன் -(எல்லாஉயிர்களையும்) அடிமை கொண்டருளும்
(திருமாலின் அவதாரமாகிய) இராமபிரானின் தூதனும் - தூதனான அனுமனும்;
அயனுடை அண்டம் கீண்டதாம் என - (அவ்வொலிக்கு எதிராக)
பிரம்மாண்டமே பிளந்தது என்று சொல்லும்படியாகவும்; கிரி உக - மலைகள்
பொடியாய்ச் சிந்தும்படியாகவும்; நெடும் நிலம் கிழிய - நீண்ட பூமி பிளக்கும்
படியும்; நீண்ட மாதிரம் வெடிபட - நெடிய திசைகள் பிளவுபடவும்; அவன்
நெடுஞ்சிலையில் பூண்ட நாண்இற -
இந்திர சித்தினது நீண்ட வில்லில்
பூட்டிய நாண் அற்றுப் போகவும்; தன் நெடுந்தோள் புடைத்து ஆர்த்தான்
-
தனது நெடிய தோள்களைக் கொட்டிக் கர்ச்சனை செய்தான்.