இந்திரசித்து,முன் எழுப்பிய ஒலிக்குக் கருவியாயிருந்த நாணும் அறும்படி இருந்தது, அனுமன் தோள் புடைத்து ஆர்த்த ஒலி என்பது கருத்து. (62) | 5779. | ‘நல்லை ! நல்லை ! இஞ் ஞாலத்துள், நின் ஒக்க நல்லார் இல்லை !இல்லையால் ! எறுழ் வலிக்கு யாரொடும் இகல வல்லை ! வல்லை! இன்று ஆகும், நீ படைத்துள வாழ்நாட்கு எல்லை ! எல்லை!’ என்று, இந்திரசித்துவும் இசைத்தான். |
நல்லை நல்லை -நீமிகவும் சாமர்த்தியம் உள்ளவன்; இஞ் ஞாலத்துள் நின் ஒக்க நல்லார் இல்லை இல்லை - இந்த உலகத்தில் உனக்குச் சமமான சமர்த்தர்கள் யாரும் இல்லை; எறுழ்வலிக்கு - மிக்க வலிமைத் திறத்தில்; யாரொடும் இகல வல்லை வல்லை - நீ எல்லோருடனும்மாறுபடுதற்கு மிகவும் வல்லவன்; நீ படைத்துள வாழ் நாட்கு எல்லைஎல்லை இன்று ஆகும் - நீ அடைந்துள்ள உன் வாழ் நாளுக்கு இன்றேமுடிவு எல்லையாக அமையும்; என்று - என்று சொல்லி; இந்திர சித்துவும்இசைத்தான் - இந்திரசித்தும் (இகழ்ந்து தன் வீரம் தோன்றப் பெருமிதத்தோடு)கூறினான். பிறரோடு வைத்துநோக்குமிடத்து நீ ஒப்புயர்வற்ற வீரன் என விளங்குவையாயினும், நான் உன்னை இன்றைக்குக் கொன்று விடுவேன் என்று, அனுமனை நோக்கி இந்திரசித்து வீரவாதம் கூறினான் என்க. (63) | 5780. | ‘நாளுக்குஎல்லையும், நிருதராய் உலகத்தை நலியும் கோளுக்குஎல்லையும், கொடுந் தொழிற்கு எல்லையும், கொடியீர் ! வாளுக்குஎல்லையும் வந்தன; வகை கொண்டு வந்தேன் தோளுக்கு எல்லைஒன்று இல்லை’ என்று அனுமனும் சொன்னான். |
கொடியீர் ! -கொடியஅரக்கர்களே !; நாளுக்கு எல்லையும் - உங்கள் வாழ்நாளுக்கு ஒரு முடிவும்; நிருதராய் உலகத்தை நலியும் |