பக்கம் எண் :

பாசப் படலம்693

கோளுக்கு எல்லையும் -அரக்கர்களாய் உலகத்தை வருத்தும் உங்கள்
கொள்கைக்கு ஒரு முடிவும்; கொடும் தொழிற்கு எல்லையும் - உங்கள்
கொடிய செய்கைகளாகிய பாவத்திற்கு ஒரு முடிவும்; வாளுக்கு எல்லையும்
வந்தன -
உங்கள் வாள் முதலிய படைக்கலங்களுக்கு ஒரு முடிவும் இப்போது
வந்துவிட்டன; வகை கொண்டு வந்தேன் - அதற்குரிய உபாயங்கொண்டு
இங்கேயான் வந்துள்ளேன்; தோளுக்கு எல்லை ஒன்று இல்லை - (ஆனால்)
என் தோளாற்றலுக்கு முடிவு சிறிதும் உண்டாகாது; என்று, அனுமனும்
சொன்னான் -
இவ்வாறு அனுமனும் இந்திரசித்துக்கு மறுமொழி கூறினான்.
                                                          (64)

5781.

‘இச் சிரத்தையைத் தொலைப்பென்’ என்று, இந்திரன்
                                   பகைஞன்,
பச்சிரத்தம்வந்து ஒழுகிட, வானவர் பதைப்ப,
வச்சிரத்தினும்வலியன, வயிர வான் கணைகள்,
அச் சிரத்தினும்மார்பினும் அழுத்தலும்-அனுமன்.

     இந்திரன்பகைஞன்  - (அது கேட்டு)இந்திரசித்து; ‘இ சிரத்தையை
தொலைப்பென்’என்று -
(இந்தக் குரங்கின்) இந்த நம்பிக்கையை
அழித்துவிடுவேன்’ என்று கருதி; அச்சிரத்தினும் மார்பினும் - அந்த
அனுமனுடைய தலையிலும் மார்பிலும்; பச்சு இரத்தம் வந்து ஒழுகிட - புதிய
இரத்தம் வந்து ஒழுகும்படியும்; வானவர் பதைப்ப - (அது கண்டு) தேவர்கள்
துடிக்கும்படியாகவும்; வச்சிரத்தினும் வலியன வயிரவான் கணைகள் -
வச்சிராயுதத்தைக் காட்டிலும் வலிமை உடையனவான கூர்மையான பெரிய
அம்புகளை; அழுத்தலும் - அழுந்த எய்த போது; அனுமன் - ,

     நெடுஞ்சினங் கொண்டுநிமிர்ந்தான் என அடுத்த கவியோடு முடியும். 
                                                     (65)

5782.

குறிதுவான் என்று குறைந்திலன், நெடுஞ்சினம்
                              கொண்டான்,
மறியும் வெண்திரை மா கடல் உலகு எலாம்
                              வழங்கி,
சிறிய தாய்சொன்ன திருமொழி சென்னியில் சூடி,
நெறியில் நின்றதன் நாயகன் புகழ் என,
                              நிமிர்ந்தான்.