கொடும்சினம் கொண்டான் - (கணைகள் அழுந்தப் பெற்ற அனுமன்) கொடிய கோபம் கொண்டு; வான் குறிது என்று குறைந்திலன் - ஆகாயம் உயர்வு போதாது என்று தன் வடிவு குறுகாதவனாய் (வான்முகட்டி)னும் மேலாக வளர்ந்து); சிறிய தாய் சொன்ன திருமொழி சென்னியில் சூடி - தன் சிறியதாயான கைகேயி சொன்ன கட்டளை மொழிகளைத் தன் தலையால் ஏற்று; மறியும் வெண் திரை மாகடல் உலகு எலாம் வழங்கி - மடங்குகின் றவெண்மையான அலைகளை உடைய பெரிய கடலினால் சூழப்பட்ட உலகம்முழுவதையும் (தன் தம்பியாகிய பரதனுக்கு) அளித்து; நெறியில் நின்ற தன்நாயகன் புகழ் என - அறநெறியில் தங்கி நின்ற தனது தலைவனானஇராமபிரான் புகழேபோல; நிமிர்ந்தான் - பேருரு எடுத்துக் கொண்டுநின்றான். இராமபிரான்புகழ் அனுமனின் நெடுமைக்கு உவமை கூறப்பட்டது. (66) | 5783. | பாகம்அல்லது கண்டிலன்; அனுமனைப் பார்த்தான்; மாக வன் திசைபத்தொடும் வரம்பு இலா உலகிற்கு ஏக நாதனை எறுழ்வலித் தோள் பிணிந்து ஈர்த்த மேக நாதனும்,மயங்கினனாம் என வியந்தான். |
மாகவன் திசை -பெரியவானம் முதலான; பத்தொடும் - வலிய திசைகள் பத்துடன்; வரம்பு இலா உலகிற்கு ஏகநாதனை - அளவற்ற உலகங்களுக்கு எல்லாம் தனித்தலைவனான இந்திரனை; எறுழ் வலித் தோள் பிணிந்து ஈர்த்த மேகநாதனும் - மிக்க வலிமையை உடைய தோள்களைக் கட்டி இழுத்த இந்திரசித்தும்; அனுமனைப் பார்த்தான் பாகம் அல்லது கண்டிலன் - அனுமனைப் பார்த்து, அவனது உருவில் ஒரு சிறு பகுதியே அல்லாமல் முழு உருவும் காணாதவனாகி; மயங்கினன் ஆம் என வியந்தான் - திகைப்புண்டவன் போல ஆச்சரியமுற்றான். (67) | 5784. | நீண்டவீரனும், நெடுந் தடங் கைகளை நீட்டி, ஈண்டு வெஞ் சரம்எய்தன எய்திடாவண்ணம், மீண்டு போய்விழ வீசி, ஆங்கு அவன் மிடல் தடந் தேர் பூண்ட பேயொடு,சாரதி தரைப்பட, புடைத்தான். |
|