| 5790. | பார மா மரம் முடியுடைத் தலையிடைப் படலும், தாரையின் நெடுங்கற்றைகள் சொரிவன தயங்க, ஆர மால் வரைஅருவியின் அழி கொழுங் குருதி சோர நின்றுஉடல் துளங்கினன்-அமரரைத் தொலைத்தான். |
அமரரைத்தொலைத்தான் - தேவர்களை வென்றவனானஇந்திரசித்து; முடியுடைத் தலையிடை - கிரீடம் அணிந்த தனது தலையின் மேல்; பார மாமரம் படலும் - வலியதும் பெரியதுமான அந்த மராமரம் பட்ட அளவிலே; நெடும் கற்றைகள் தாரையின் சொரிவன தயங்க - (கீரிடத்தில் உள்ள மாணிக்கங்களின்) நீண்ட ஒளித் தொகுதிகள் ஒழுங்காக மேற் சொரிவனவற்றைப் போன்று விளங்கும்படி; மால் வரை அருவியின் - பெரிய மலையிலிருந்து வருகின்ற நீர் அருவிபோல; அழி கொழுங்குருதி ஆர சோர - வழிகின்ற கொழுமையான இரத்தம் மிகுதியாகப் பெருக; நின்று, உடல் துளங்கினான் - (ஏங்கித் தளர்ச்சியுற்று) நின்று, உடம்பு நடுங்கினான். (74) | 5791. | நின்று,போதம் வந்துறுதலும், நிறை பிறை எயிற்றைத் தின்று, தேவரும்முனிவரும் அவுணரும் திகைப்ப, குன்றுபோல் நெடுமாருதி ஆகமும் குலுங்க, ஒன்று போல்வன,ஆயிரம் பகழி கோத்து உய்த்தான். |
நின்று - (இந்திரசித்து)சிறிது போது அயர்ச்சியுற்று நின்று; போதம் வந்து உறுதலும் - பிறகு அறிவு வந்து கூடின அளவில்; நிறை பிறை எயிற்றை தின்று - தன் வாயில் நிறைந்துள்ளனவும் பிறைச்சந்திரன் போன்றனவுமான பற்களைக் கோபத்தினால் கடித்து; தேவரும், முனிவரும் அவுணரும் திகைப்ப - தேவர்களும் இருடிகளும் அசுரர்களும் யாதாகுமோ என்று ஏக்கமுற; குன்று போல் நெடு மாருதி ஆகமும் குலுங்க - மலை போன்ற உயர்ந்த வடிவமுள்ள அனுமனது உடலும் நடுங்க; ஒன்று போல் வன - ஒரே தன்மையான (வேறுபாடு இல்லாத); ஆயிரம் பகழி கோத்து உய்த்தான் - ஆயிரம் அம்புகளை, வில்லில் பூட்டி அனுமன் மீது செலுத்தினான். (75) | 5792. | உய்த்தவெஞ் சரம் உரத்தினும் கரத்தினும் ஒளிப்ப, கைத்தசிந்தையன் மாருதி, நனி தவக் கனன்றான்; |
|